பொது செய்தி

தமிழ்நாடு

மாட்டுச் சந்தையில் ரூ.1.50 கோடிக்கு வர்த்தகம்

Added : நவ 24, 2021
Share
Advertisement
சேந்தமங்கலம்: புதன்சந்தை மாட்டுச் சந்தையில், 1.50 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. நாமக்கல் மாவட்டம் புதன்சந்தையில் மாட்டுச்சந்தை கூடுவது வழக்கம். இச்சந்தை திங்கட்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை வரை நடக்கும். கோடிக்கணக்கில் வர்த்தம் நடைபெறும். நேற்று மிகவும் குறைவான விவசாயிகள், வியாபாரிகள் வந்திருந்தனர். நேற்று கூடிய சந்தையில் ஆயிரக்கணக்கான பசு, எருமை

சேந்தமங்கலம்: புதன்சந்தை மாட்டுச் சந்தையில், 1.50 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. நாமக்கல் மாவட்டம் புதன்சந்தையில் மாட்டுச்சந்தை கூடுவது வழக்கம். இச்சந்தை திங்கட்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை வரை நடக்கும். கோடிக்கணக்கில் வர்த்தம் நடைபெறும். நேற்று மிகவும் குறைவான விவசாயிகள், வியாபாரிகள் வந்திருந்தனர். நேற்று கூடிய சந்தையில் ஆயிரக்கணக்கான பசு, எருமை உள்ளிட்ட அனைத்து வகையான மாடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. மேலும் கேரளாவில் அதிக மழை, சபரிமலை சீசன் தொடங்கியதால் வியாபாரிகள் வரவில்லை. விற்பனை மாடுகள் வரத்து குறைவால் விலை கடந்த வாரத்தை விட இந்த வாரம் குறைந்துள்ளது. இறைச்சி மாடுகள், 19 ஆயிரம் ரூபாய், கன்று குட்டிகள், 9,000 ரூபாய்க்கும் குறைவாக விற்பனையாகின. கோமாரி நோய் தாக்கத்தினால் கறவை மாடுகள் வரத்து குறைந்து, விற்பனை இல்லை. இந்த வாரம் மொத்தம், 1.50 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X