பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு 23 நாளில் 58 டி.எம்.சி., தண்ணீர் வரத்து

Added : நவ 24, 2021
Share
Advertisement
மேட்டூர்: மேட்டூர் அணைக்கு கடந்த, 23 நாளில், 58 டி.எம்.சி., நீர் வந்துள்ளது. மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை தீவிரம் அடைந்து நீர்வரத்து அதிகரித்ததால் கடந்த, 13ல் மேட்டூர் அணை நிரம்பியது. கடந்த, 14 அதிகாலை முதல் அணையில் இருந்து உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்படுகிறது. கடந்த இரு நாட்களாக அணைக்கு வினாடிக்கு, 30 ஆயிரம் கனஅடி நீர் வந்த

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு கடந்த, 23 நாளில், 58 டி.எம்.சி., நீர் வந்துள்ளது. மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை தீவிரம் அடைந்து நீர்வரத்து அதிகரித்ததால் கடந்த, 13ல் மேட்டூர் அணை நிரம்பியது. கடந்த, 14 அதிகாலை முதல் அணையில் இருந்து உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்படுகிறது. கடந்த இரு நாட்களாக அணைக்கு வினாடிக்கு, 30 ஆயிரம் கனஅடி நீர் வந்த நிலையில், அதே அளவு உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது. கர்நாடகா நவம்பர் மாதம் தமிழகத்திற்கு, 13.78 டி.எம்.சி., நீர் வழங்க வேண்டும். ஆனால், கடந்த, 1 முதல் நேற்று வரை, 23 நாள் மேட்டூர் அணைக்கு, 58 டி.எம்.சி., நீர் வந்துள்ளது. இதில், 30 டி.எம்.சி., நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டுள்ளது. நேற்று அணை நீர்மட்டம், 120.10 அடி. நீர் கொள்ளளவு, 93.66 டி.எம்.சி.,யாக இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X