சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெள்ளத்தில் அடித்து சென்ற முதியவர் சடலமாக மீட்பு

Added : நவ 24, 2021
Share
Advertisement
செங்கம்: செங்கம் அருகே, வெள்ளத்தில் அடித்து சென்ற முதியவர் சடலமாக மீட்கப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தோக்கவாடியை சேர்ந்த மேரிபுளோரா, 42, உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இவரது சடலத்தை அடக்கம் செய்ய, செய்யாற்றை கடந்து சென்று மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது சுப்பிரமணி, 65, என்ற முதியவர் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டார்.

செங்கம்: செங்கம் அருகே, வெள்ளத்தில் அடித்து சென்ற முதியவர் சடலமாக மீட்கப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தோக்கவாடியை சேர்ந்த மேரிபுளோரா, 42, உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இவரது சடலத்தை அடக்கம் செய்ய, செய்யாற்றை கடந்து சென்று மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது சுப்பிரமணி, 65, என்ற முதியவர் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டார். தீயணைப்பு துறையினர், போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் இரண்டு நாட்களாக தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று அம்மனூர் பகுதியில் செய்யாற்றங்கரையில் உள்ள முட்புதரில், சடலம் ஒதுங்கி கிடப்பதாக, அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். பின்னர், தீயணைப்பு துறையினர் அவரது சடலத்தை மீட்டனர். செங்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X