பாலியல் புகாரில் சிக்கிய கல்லூரி தாளாளர் போளூர் கோர்ட்டில் சரண்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாலியல் புகாரில் சிக்கிய கல்லூரி தாளாளர் போளூர் கோர்ட்டில் சரண்

Added : நவ 24, 2021
Share
திருவண்ணாமலை: திண்டுக்கல் அருகே, பாலியல் புகாரில் சிக்கிய கல்லூரி தாளாளர், திருவண்ணாமலை அடுத்த போளூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.திண்டுக்கல் அடுத்த முத்தனம்பட்டியில் உள்ள சுரபி தனியார் நர்சிங் கல்லூரி, கேட்டரிங் கல்லூரி, பாரா மெடிக்கல் கல்லூரி ஆகியவை ஒரே வளாகத்தில் இயங்கி வருகின்றன. கல்லூரிகளில் படிக்கும் மாணவியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், இதற்கு

திருவண்ணாமலை: திண்டுக்கல் அருகே, பாலியல் புகாரில் சிக்கிய கல்லூரி தாளாளர், திருவண்ணாமலை அடுத்த போளூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.


திண்டுக்கல் அடுத்த முத்தனம்பட்டியில் உள்ள சுரபி தனியார் நர்சிங் கல்லூரி, கேட்டரிங் கல்லூரி, பாரா மெடிக்கல் கல்லூரி ஆகியவை ஒரே வளாகத்தில் இயங்கி வருகின்றன. கல்லூரிகளில் படிக்கும் மாணவியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், இதற்கு கல்லூரி விடுதி வார்டன் அர்ச்சனா உடந்தையாக இருந்ததாகவும் புகார்கள் வந்தன. இதையடுத்து, தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விடுதி வார்டன் அர்ச்சனாவை கைது செய்தனர். கல்லூரி தாளாளர் ஜோதி முருகன் தலைமறைவானார். போலீசார் அவரை தேடி வந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நீதிமன்றத்தில், நீதிபதி வெங்கடேசன் முன் ஜோதிமுருகன் சரணடைந்தார். இதையடுத்து அவரை மூன்று நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். வேலூர் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X