சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாமியாரை தாக்க முயன்ற மருமகன் அடித்து கொலை

Added : நவ 24, 2021
Share
Advertisement
மங்கலம்: திருவண்ணாமலை அருகே, மாமியாரை தாக்க முயன்ற மருமகன் அடித்து கொலை செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம், ஆனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் செல்வி, 60, இவரது மருமகன் அம்மங்கல் ஓடை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை, 37. இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று காலை மாமியார் வீட்டிற்கு சென்ற மருமகன் ஏழுமலை, செல்வியிடம் தகராறில் ஈடுபட்டு, அவரை தாக்க

மங்கலம்: திருவண்ணாமலை அருகே, மாமியாரை தாக்க முயன்ற மருமகன் அடித்து கொலை செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம், ஆனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் செல்வி, 60, இவரது மருமகன் அம்மங்கல் ஓடை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை, 37. இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று காலை மாமியார் வீட்டிற்கு சென்ற மருமகன் ஏழுமலை, செல்வியிடம் தகராறில் ஈடுபட்டு, அவரை தாக்க முயன்றார். அப்போது அங்கிருந்த ஏழுமலையின் மச்சான் மற்றொரு ஏழுமலை, 26, மைத்துனர் முத்துராமன், 42, ஆகியோர் மாப்பிள்ளை ஏழுமலையை சரமாரியாக தாக்கினர். இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மங்கலம் போலீசார் விசாரித்து மச்சான் ஏழுமலை, மைத்துனர் முத்துராமன், 42, ஆகிய இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X