ஆங்கிலேயர் காலத்து இரும்பு பாலம் மண் அரிப்பால் போக்குவரத்து தடை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆங்கிலேயர் காலத்து இரும்பு பாலம் மண் அரிப்பால் போக்குவரத்து தடை

Added : நவ 24, 2021
Share
வேலூர்: ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட, திருவலம் இரும்பு பாலத்தின் அடியில், மண் அரிப்பு ஏற்பட்டதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.வேலூர் மாவட்டம், திருவலம் பொன்னை ஆற்றின் குறுக்கே, ஆங்கிலேயர் ஆட்சியில், 85 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திரா என்ற இரும்பு பாலம் கட்டப்பட்டது. ஏராளமான சினிமா படங்களில் இந்த பாலம் இடம் பெற்றுள்ளது. ஆந்திரா மாநிலம், கலவகுண்டா அணையிலிருந்து

வேலூர்: ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட, திருவலம் இரும்பு பாலத்தின் அடியில், மண் அரிப்பு ஏற்பட்டதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.


வேலூர் மாவட்டம், திருவலம் பொன்னை ஆற்றின் குறுக்கே, ஆங்கிலேயர் ஆட்சியில், 85 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திரா என்ற இரும்பு பாலம் கட்டப்பட்டது. ஏராளமான சினிமா படங்களில் இந்த பாலம் இடம் பெற்றுள்ளது. ஆந்திரா மாநிலம், கலவகுண்டா அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், 30 ஆண்டுக்கு பிறகு பொன்னையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இரும்பு பாலத்தின் இரு கரைகளை தொட்டபடி தண்ணீர் செல்கிறது. இரும்பு பாலத்தில் சென்றால் லேசாக ஆடுவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். நெஞ்சாலைத்துறையினர் ஆய்வு செய்தனர். அதில், ஏற்கனவே வலுவிழந்துள்ள நிலையில், தற்போது வெள்ளப்பெருக்கால் இரும்பு பாலத்தின் அடியில், மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் பாலம் ஆடத் தொடங்கியது தெரியவந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இரும்பு பாலத்தில் நேற்று காலை முதல், போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. வெள்ளம் குறைந்த பிறகு தான் பாலத்தில் ஏற்பட்டுள்ள மண் அரிப்பை சரி செய்ய இயலும் என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறினர். இதனால், பாலத்தின் அருகில் உள்ள மற்றொரு பாலம் வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டு மெதுவாக இயக்கப்படுகின்றன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X