பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ள சேதங்களை பார்வையிட்ட மத்திய குழுவினர்

Added : நவ 24, 2021
Share
Advertisement
வேலூர்: வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட வெள்ள சேதங்களை மத்திய குழுவினர் பார்வையிட்டனர். வெள்ள சேதங்களை பார்வையிட மத்திய நிதியமைச்சக ஆலோசகர் கவுல், மத்திய நீர்வள ஆதார முகமை இயக்குனர்கள் தங்கமணி, பவ்யா பாண்டே ஆகியோர் நேற்று வேலூர் வந்தனர். காட்பாடியில், வெள்ள சேதங்கள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது. அப்போது வெள்ள சேத விபரங்கள் குறித்த அறிக்கையை, மாவட்ட கலெக்டர்

வேலூர்: வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட வெள்ள சேதங்களை மத்திய குழுவினர் பார்வையிட்டனர். வெள்ள சேதங்களை பார்வையிட மத்திய நிதியமைச்சக ஆலோசகர் கவுல், மத்திய நீர்வள ஆதார முகமை இயக்குனர்கள் தங்கமணி, பவ்யா பாண்டே ஆகியோர் நேற்று வேலூர் வந்தனர். காட்பாடியில், வெள்ள சேதங்கள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது. அப்போது வெள்ள சேத விபரங்கள் குறித்த அறிக்கையை, மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வழங்கினார். அதில், 524 ஹெக்டேர் நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் நாசமடைந்துள்ளன. 498 வீடுகள் இடிந்துள்ளன என, குறிப்பிட்டுள்ளார். வேலூர் தி.மு.க., - எம்.பி., கதிர் ஆனந்த் கொடுத்த மனுவில், விரிஞ்சிபுரம் காமராஜபுரத்தில் வெள்ளத்தில் வீடுகள் அடித்து செல்லப்பட்ட, 30க்கும் மேற்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என, குறிப்பிட்டிருந்தார். குகை நல்லூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மத்திய குழுவினர் பார்வையிட்டனர். சேத விபரங்கள் குறித்து, கதிர் ஆனந்த் எம்.பி., புகைப்படங்கள் மூலம் அவர்களுக்கு விளக்கினார். பொன்னையில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலத்தை பார்வையிட்ட பின், ராணிப்பேட்டை சென்ற குழுவினருக்கு, மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் புகைப்படங்கள் மூலம் பாதிப்பு குறித்து விளக்கினார். நெமிலி அருகே, மேல்புலம் புதூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை குழுவினர் ஆய்வு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X