கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது: சென்னை உயர்நீதிமன்றம்

Added : நவ 24, 2021 | கருத்துகள் (69)
Share
Advertisement
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்தை அரசுடைமையாக்கி பிறப்பித்த சட்டம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லமான வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அ.தி.மு.க அரசு அறிவித்திருந்தது. அதை செயல்படுத்தும் விதமாக சட்டம் இயற்றப்பட்டு, வேதா
Jayalalitha, Veda Illam, Chennai HC, Judgement, ஜெயலலிதா, வேதா இல்லம், அரசுடைமை, செல்லாது, சென்னை ஐகோர்ட், உயர்நீதிமன்றம்

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்தை அரசுடைமையாக்கி பிறப்பித்த சட்டம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லமான வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அ.தி.மு.க அரசு அறிவித்திருந்தது. அதை செயல்படுத்தும் விதமாக சட்டம் இயற்றப்பட்டு, வேதா நிலையத்தையும் அங்குள்ள அசையும் சொத்துக்களையும் அரசுடமையாக்கப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் சகோதரரின் மகள், மகனான தீபா, தீபக் ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில், தனிநபர் சொத்துக்களை கையகப்படுத்துவது தொடர்பாக சட்டம் இயற்ற அரசுக்கு அதிகாரமில்லை எனவும், வேதா நிலையத்தை அரசுடமையாக்கி பிறப்பித்த சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.


latest tamil news


இது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சேஷசாயி விசாரித்து வந்தார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்று (நவ.,24) இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், 'வேதா நிலையம் மற்றும் மெரினாவில் உள்ள பீனிக்ஸ் நினைவிடம் என 2 நினைவிடங்கள் எதற்கு? ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடைமையாக்கி பிறப்பித்த சட்டம் செல்லாது,' எனக் கூறி, 3 வாரங்களில் வாரிசுதாரர்களிடம் வேதா இல்லத்தை ஒப்படைக்க சென்னை கலெக்டருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
25-நவ-202123:54:17 IST Report Abuse
Vena Suna ஜெயலலிதா அவர் அண்ணாவையும் ஒதுக்கினார். ஜெயலலிதா அவர் அண்ணா குழந்தைகளான தீபாவையும் தீபாவின் அண்ணாவையும் ஒதுக்கி தன்னுடன் சேர்க்கவில்லையே. ஜெயலலிதா வுயிலும் எழுதவில்லை. அப்படி இருக்கும் போது தீபாவும் அவர் அண்ணாவும் சொத்துக்குக்காக எப்படி உரிமை கேட்க முடியும்?.
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
25-நவ-202102:02:57 IST Report Abuse
Matt P ஜெயலலிதா உள்ளவரை இப்படி மருமகன் மருமகள் இருந்தார்கள் என்றும். பலருக்கு தெரியாது.ஜெயவும் இவர்களை உறவினர்களாக நடத்தியதாக தெரியவில்லை.
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
25-நவ-202100:52:41 IST Report Abuse
மலரின் மகள் அரசியல் செய்கிறோம், கட்சிக்கு பெயர், மக்களுக்கு நல்லது என்று நினைத்து கொண்டு புதிதாக ஒரு சட்டத்தை கொண்டுவந்து இந்த சொத்துக்களை அரசு எடுத்துக்கொண்டது எனக்கு உடன்பாடில்லாமல் தான் இருந்தது. அப்படியே எடுக்கவேண்டும் என்று நினைத்தால் சம்பந்த பட்ட வாரிசுகளுடன் பேசிச்சுவார்தை செய்திருக்கவேண்டும். அவர்கள் கன்வின்ஸ் செய்து அவர்ளுக்கு மார்க்கெட் விலையை விட சற்று கூடுதலாக இழப்பீடு தந்து அதன் பிறகு அவர்ளின் சம்மதத்துடன் எடுத்திருந்தால் அதை பாராட்டலாம். வாரிசுரிமை சட்டங்கள் தரும் பாதுகாப்புகளை கேலிக்குரியதாக்கியிருக்கக்கூடாது. தனிமனித உரிமைகளை அரசு குறுக்கீடு செய்வது எங்கோ நெருடியது. நீதி மன்றங்கள் இது போன்ற தனி மனித உரிமைகளில் சிறப்பான தீர்ப்புக்களை வரவேற்கத்தக்க தீர்ப்புக்களை தந்திருப்பது மகிழ்ச்சியே. மேல் முறையீடு செய்யவோ அரசியல் செய்யவோ வேண்டாமே.
Rate this:
25-நவ-202108:10:43 IST Report Abuse
Vittalanandஅரசுடுடமை ஆக்குமுன் வழக்கறிஞர் முத்துக்குமாரசாமிய ஆலோசித்திருக்கலாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X