பொது செய்தி

தமிழ்நாடு

சாலை, வடிகால் வசதி கோரி மழைநீரில் நாற்று நட்டு ஆர்ப்பாட்டம்

Added : நவ 24, 2021
Share
Advertisement
மல்லசமுத்திரம்: செக்காரப்பட்டியில் சாலை மற்றும் வடிகால் வசதி செய்து தரக்கோரி மழைநீரில் மா.கம்யூ.,கட்சியினர் நாற்று நட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மல்லசமுத்திரம் ஒன்றியம், குப்பிச்சிபாளையம் பஞ்., செக்காரப்பட்டியில், 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசிக்கின்றனர். போதிய வடிகால், சாலை வசதி இல்லாததால் கடந்த இரண்டு ஆண்டுகளாக குடியிருப்புகள் அருகே குட்டை போல்

மல்லசமுத்திரம்: செக்காரப்பட்டியில் சாலை மற்றும் வடிகால் வசதி செய்து தரக்கோரி மழைநீரில் மா.கம்யூ.,கட்சியினர் நாற்று நட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


மல்லசமுத்திரம் ஒன்றியம், குப்பிச்சிபாளையம் பஞ்., செக்காரப்பட்டியில், 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசிக்கின்றனர். போதிய வடிகால், சாலை வசதி இல்லாததால் கடந்த இரண்டு ஆண்டுகளாக குடியிருப்புகள் அருகே குட்டை போல் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், மக்கள் பல்வேறு நோய்த் தொற்றுக்கு ஆளாகினர். வாகன ஓட்டிகள் கீழே விழும் சம்பவம் தொடர்ந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், மா.கம்யூ., கிழக்கு ஒன்றிய செயலாளர் தேவராஜன் தலைமையில் அப்பகுதி மக்கள், தேங்கி நிற்கும் மழை நீரில் நாற்று நடவு செய்து மழை நீரில் உருண்டு, சோப்பு போட்டு குளித்தனர். ஒரு மணி நேரம் நீடித்த போராட்டத்திற்கு பிறகு பஞ்., தலைவர் செந்தில்குமார் நேரில் வந்து, 'உடனடியாக பணி துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதியளித்ததையடுத்து மக்கள் கலைந்து சென்றனர். எலச்சிபாளையம் சி.பி.எம்., ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ், தொடக்க வேளாண் கூட்டுறவுவங்கி இயக்குனர் மாரிமுத்து, சி.பி.எம் மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X