பொது செய்தி

தமிழ்நாடு

தொழில் சார் வல்லுனர் தேர்வு: விண்ணப்பங்கள் வரவேற்பு

Added : நவ 24, 2021
Share
Advertisement
நாமக்கல்: தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம், நாமக்கல் மாவட்டத்தில், புதுச்சத்திரம், மோகனூர், திருச்செங்கோடு, பள்ளிபாளையம் ஒன்றியங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த ஒன்றியங்களில் உள்ள தொழில் முனைவோர் பயன்பெறும் வகையில், திட்ட செயல்பாட்டுக்காக, தொழில்சார் சமூக வல்லுனர்கள், ஒப்பந்த அடிப்படையில், கிராம ஊராட்சிக்கு ஒரு நபர் என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நாமக்கல்: தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம், நாமக்கல் மாவட்டத்தில், புதுச்சத்திரம், மோகனூர், திருச்செங்கோடு, பள்ளிபாளையம் ஒன்றியங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த ஒன்றியங்களில் உள்ள தொழில் முனைவோர் பயன்பெறும் வகையில், திட்ட செயல்பாட்டுக்காக, தொழில்சார் சமூக வல்லுனர்கள், ஒப்பந்த அடிப்படையில், கிராம ஊராட்சிக்கு ஒரு நபர் என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்துக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இளநிலை பட்டபடிப்பு, மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக (அ) குடும்ப உறுப்பினர் குழுவில் உள்ளவர்களாக இருக்க வேண்டும். வயது வரம்பு, 25 முதல், 45 வயது, ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பதுடன், அவற்றை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். தங்கள் பஞ்சாயத்தில் உள்ள ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம். வாழ்வாதாரம், தொழில் முனைவு தொடர்பான அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பதாரர், மக்கள் அமைப்புகளின் நிர்வாகிகளாகவோ அல்லது பணியாளர்களாகவோ இருக்கக் கூடாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதியாகவோ இருக்கக் கூடாது. வட்டார அளவிலான அணித்தலைவர்களை தொடர்பு கொண்டு விண்ணப்பங்கள் வழங்கலாம். புதுச்சத்திரம் மீனாட்சி, 70100 93524, திருச்செங்கோடு நிர்மலா, 86753 31511, பள்ளிபாளையம் ரவிகுமார், 94890 42875, மோகனூர் செந்தில்குமார், 90037 72607. தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, தங்கள் ஊராட்சியில் உள்ள ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் (பி.எல்.எப்.,), வரும், 27 மாலை, 5:00 மணிக்குள் வழங்க வேண்டும். இவ்வாறு, கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X