போக்குவரத்து ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்து ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

Added : நவ 24, 2021
Share
நாமக்கல்: அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய பேச்சுவார்த்தையை உடனே துவங்கக் கோரி, நாமக்கல்லில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. நாமக்கல் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம், சி.ஐ.டி.யு., சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. கிளைத்தலைவர் வரதராஜூ, செயலாளர் பெரியசாமி தலைமை வகித்தனர். போக்குவரத்து கழகங்களின் பற்றாக்குறையை

நாமக்கல்: அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய பேச்சுவார்த்தையை உடனே துவங்கக் கோரி, நாமக்கல்லில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. நாமக்கல் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம், சி.ஐ.டி.யு., சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. கிளைத்தலைவர் வரதராஜூ, செயலாளர் பெரியசாமி தலைமை வகித்தனர். போக்குவரத்து கழகங்களின் பற்றாக்குறையை ஈடுகட்ட வரவுக்கும் செலவிற்குமான வித்தியாசத் தொகையை அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி வழங்க வேண்டும். ஊதிய பேச்சுவார்த்தையை உடனே துவக்க வேண்டும். ஓய்வுபெற்றோர் பணப்பலன், அகவிலைப்படி உயர்வு, மருத்துவக்காப்பீட்டு அமல்படுத்த வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகள் வலியுத்தப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X