கூட்டுறவு சங்க நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு சங்க நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்

Added : நவ 24, 2021
Share
நாமக்கல்: கடனை தள்ளுபடி செய்து, 10 மாதங்களாகியும் நகைகளை திருப்பித்தராததாக கூறி, வேட்டாம்பாடி கூட்டுறவு சங்கத்தை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். நாமக்கல் அடுத்த வேட்டாம்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 2,700 உறுப்பினர்கள் உள்ளனர். நகை கடன் பெற்ற, 150க்கும் மேற்பட்ட விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்து கடந்த, அ.தி.மு.க., ஆட்சியின் போது சான்றிதழ்

நாமக்கல்: கடனை தள்ளுபடி செய்து, 10 மாதங்களாகியும் நகைகளை திருப்பித்தராததாக கூறி, வேட்டாம்பாடி கூட்டுறவு சங்கத்தை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். நாமக்கல் அடுத்த வேட்டாம்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 2,700 உறுப்பினர்கள் உள்ளனர். நகை கடன் பெற்ற, 150க்கும் மேற்பட்ட விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்து கடந்த, அ.தி.மு.க., ஆட்சியின் போது சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிலையில் கடனை தள்ளுபடி செய்து, 10 மாதங்கள் ஆன நிலையில் தங்கள் நகைகளை கூட்டுறவு சங்க நிர்வாகம் திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வருவதாகவும், மீண்டும் நகை கடன் வழங்க கோரியும் விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தை நேற்று முற்றுகையிட்டனர். தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க செயலாளர் மாதேஸ்வரன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X