பொது செய்தி

தமிழ்நாடு

மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று

Added : நவ 24, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, இரட்டை இலக்கில் உள்ளது. நேற்று, பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதன் மூலம், மாவட்டத்தில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 53 ஆயிரத்து, 171ஆக அதிகரித்துள்ளது.* நாமக்கல்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, இரட்டை இலக்கில் உள்ளது. நேற்று, பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதன் மூலம், மாவட்டத்தில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 53 ஆயிரத்து, 171ஆக அதிகரித்துள்ளது.

* நாமக்கல் அடுத்த கோனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், 500 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். ஒன்பது ஆசிரியர்கள், 18 ஆசிரியைகள் பணிபுரிகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் தலைமையாசிரியர் உடல்நலம் பாதிக்கப்பட்டார். பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆசிரியர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டதில் இரு ஆசிரியைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மாணவ, மாணவியருக்கு பரிசோதனை செய்ததில், யாருக்கும் இதுவரை தொற்று உறுதி செய்யவில்லை. மாணவர்களின் உடல் நலன் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக பள்ளி கல்வி மற்றும் சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X