பொது செய்தி

தமிழ்நாடு

உபகரணங்கள் வழங்கல்

Added : நவ 24, 2021
Share
Advertisement
திருச்செங்கோடு: திருச்செங்கோடு வட்டார வள மையத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் சார்பில், மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கு, உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மேற்பார்வையாளர் (பொ) சந்திரசேகர் தலைமை வகித்தார். 2020-21ம் கல்வியாண்டில், உதவி உபகரணங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட, ஒன்று முதல், 8ம் வகுப்பு வரை படிக்கும், 64 மாற்றுத்திறன் கொண்ட

திருச்செங்கோடு: திருச்செங்கோடு வட்டார வள மையத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் சார்பில், மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கு, உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மேற்பார்வையாளர் (பொ) சந்திரசேகர் தலைமை வகித்தார். 2020-21ம் கல்வியாண்டில், உதவி உபகரணங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட, ஒன்று முதல், 8ம் வகுப்பு வரை படிக்கும், 64 மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு, நடைபயிற்சி கருவி, மூளை முடக்குவாத நாற்காலி, மனவளர்ச்சி மாணவர்களுக்கான பயிற்சி பெட்டகம் ஆகிய உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, இயன்முறை மருத்துவர் மற்றும் சிறப்பாசிரியர்கள், உபகரணங்கள் பயன்படுத்தும் விதம், பராமரிக்கும் முறை குறித்து பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு விளக்கினர். ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X