நவ.,29ல் 1000 விவசாயிகளுடன் பார்லி நோக்கி பேரணி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

நவ.,29ல் 1000 விவசாயிகளுடன் பார்லி நோக்கி பேரணி

Updated : நவ 24, 2021 | Added : நவ 24, 2021 | கருத்துகள் (37)
Share
புதுடில்லி; வரும் நவ.,29ல் 60 டிராக்டர்கள் மற்றும் 1000 விவசாயிகளுடன் பார்லிமென்ட் நோக்கி பேரணி நடைபெறும் என பாரதிய கிஷான் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்தாண்டு நவ.,26ம் தேதி முதல் டில்லி எல்லையில் பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில், வேளாண் சட்டங்களை
Rakesh Tikait, 60 Tractors, Thousand People, Will Head, Parliament, Nov 29, Farm Laws, Farmer Protest, ராகேஷ் திகாயத், விவசாயிகள் போராட்டம், பார்லிமென்ட், பேரணி, வேளாண் சட்டங்கள்

புதுடில்லி; வரும் நவ.,29ல் 60 டிராக்டர்கள் மற்றும் 1000 விவசாயிகளுடன் பார்லிமென்ட் நோக்கி பேரணி நடைபெறும் என பாரதிய கிஷான் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்தாண்டு நவ.,26ம் தேதி முதல் டில்லி எல்லையில் பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாகவும், நவ.,29ல் துவங்கும் பார்லி குளிர்கால கூட்டத்தொடரில் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்திருந்தார். ஆனால், விவசாயிகள் போராட்டத்தை கைவிட மறுத்துள்ளனர்.


latest tamil news


பாரதிய கிஷான் சங்கம் தலைவர் ராகேஷ் திகாயத், 'மூன்று விவசாய சட்டங்களை வாபஸ் பெறுவது மட்டும் எங்கள் கோரிக்கையல்ல. குறைந்த பட்ச ஆதார விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தை கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட மற்ற கோரிக்கைகள் பற்றி எங்களுடன் அரசு பேசி தீர்வு காண வேண்டும். அப்போது தான் போராட்டத்தை கை விட்டு வீடு திரும்புவோம். இல்லாவிடில் வீடு திரும்பமாட்டோம்,' எனக் கூறியிருந்தார். மேலும், நவ.,29ம் தேதி பார்லிமென்ட் நோக்கி பேரணி செல்ல உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.


latest tamil news


இது தொடர்பாக இன்று (நவ.,24) அவர் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்வதை வலியுறுத்தி நவ.,29ம் தேதி விவசாய சங்கங்கள் சார்பில் 60 டிராக்டர்கள் மற்றும் 1000 விவசாயிகளுடன் பார்லிமென்ட் நோக்கி பேரணி செல்வோம். அரசு அனுமதியளித்த சாலைகள் வழியாக மட்டுமே டிராக்டர்கள் செல்லும். சாலைகளை மறிப்பது எங்கள் நோக்கமல்ல. நேராக பார்லிமென்ட் செல்வோம். நவ.,26ம் தேதி விவசாயிகள் போராட்டம் துவங்கி ஓராண்டு நிறைவு பெறுவதால், டில்லியில் ஏராளமான விவசாயிகள் திரளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X