பொது செய்தி

தமிழ்நாடு

மாயனூர் கதவணைக்கு வரத்து குறைவு; நொய்யல் வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தம்

Added : நவ 24, 2021
Share
Advertisement
கரூர்: மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீர் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. ஆத்துப்பாளையம் அணையில், நொய்யல் வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.கரூர் அருகே மாயனூர் கதவணைக்கு நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 66 ஆயிரத்து, 322 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 36 ஆயிரத்து, 691 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. அந்த தண்ணீர் முழுவதும்

கரூர்: மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீர் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. ஆத்துப்பாளையம் அணையில், நொய்யல் வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.


கரூர் அருகே மாயனூர் கதவணைக்கு நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 66 ஆயிரத்து, 322 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 36 ஆயிரத்து, 691 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. அந்த தண்ணீர் முழுவதும் காவிரியாற்றில் சம்பா சாகுபடி பணிக்காக திறக்கப்பட்டது. மழை காரணமாக நான்கு பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அணைப்பகுதியில், 6.50 மி.மீ., மழை பெய்துள்ளது.

அமராவதி அணை நிலவரம்: திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு நேற்று முன்தினம், 542 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி, 707 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. இதனால், அமராவதி ஆற்றில், 266 கன அடி, புதிய பாசன வாய்க்காலில், 300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 88.13 அடியாக இருந்தது. அணைப்பகுதியில், 22 மி.மீ., மழை பெய்தது. மழை காரணமாக, கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 1,822 கன அடி தண்ணீர் வந்தது.

ஆத்துப்பாளையம் அணை நிலவரம்: க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 50 கன அடி தண்ணீர் வந்தது. நொய்யல் வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 26.14 அடியாக இருந்தது.

மழை நிலவரம்: கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விபரம் (மி.மீ.,) கரூர், 6.1, அரவக்குறிச்சி, 2, அணைப்பாளையம், 20, குளித்தலை, 2, தோகைமலை, 6, கிருஷ்ணராயபுரம், 1, மாயனூர், 6.5, ஆகிய பஞ்சப்பட்டி, 12, கடவூர், 8, பாலவிடுதி, 7.1, மயிலம்பட்டி, 12 ஆகிய அளவுகளில் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 6.89 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X