பொது செய்தி

தமிழ்நாடு

கிளீனர் உடலுடன் போராட்டம்: கரூர் அருகே தடியடி நடத்தி கலைப்பு

Added : நவ 24, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் அருகே, 19 மணி நேர போராட்டத்துக்கு பிறகு, மாரடைப்பால் உயிரிழந்த கிளீனர் உடலை, போலீசார் லேசான தடியடி நடத்தி அப்புறப்படுத்தினர்.அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் செல்வமணி, 59; லாரி கிளீனர். இவர் நேற்று முன்தினம் மாலை, 5:30 மணிக்கு கரூர் - ஈரோடு சாலை ஆத்தூரில் உள்ள, பாரத் பெட்ரோலிய நிறுவன வளாகத்தில், மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அதிர்ச்சியடைந்த லாரி

கரூர்: கரூர் அருகே, 19 மணி நேர போராட்டத்துக்கு பிறகு, மாரடைப்பால் உயிரிழந்த கிளீனர் உடலை, போலீசார் லேசான தடியடி நடத்தி அப்புறப்படுத்தினர்.


அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் செல்வமணி, 59; லாரி கிளீனர். இவர் நேற்று முன்தினம் மாலை, 5:30 மணிக்கு கரூர் - ஈரோடு சாலை ஆத்தூரில் உள்ள, பாரத் பெட்ரோலிய நிறுவன வளாகத்தில், மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அதிர்ச்சியடைந்த லாரி டிரைவர்கள், கிளீனர்கள், பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் ஆம்புலன்ஸ் வர தாமதம் ஏற்பட்டதால், செல்வமணி உயிரிழந்தார் என கூறி, உடலை அப்புறப்படுத்த விடாமல் நேற்று காலை வரை, தொடந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் லாரிகள் மூலம், 23 மாவட்டங்களுக்கு பெட்ரோல், டீசல் கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டது. 100க்கும் மேற்பட்ட லாரிகள், நீண்ட வரிசையில் நின்றன. நேற்று காலை, 9:30 மணிக்கு ஆர்.டி.ஓ., பாலசுப்பிரமணியன், ஏ.டி.எஸ்.பி.,க்கள் கண்ணன், ராதாகிருஷ்ணன், டவுன் டி.எஸ்.பி., தேவராஜ் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட லாரி டிரைவர், கிளீனர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதால், செல்வமணி உயிரிழந்தார் என, பாரத் பெட்ரோலிய நிறுவனம், கடிதம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து கடிதமும் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து, உயிரிழந்த செல்வமணி உடலை, பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்ல போலீசார் முயன்றனர். ஆனால், செல்வமணியின் தம்பி ராஜேந்திரன், 45, உள்ளிட்ட டிரைவர்கள், கிளீனர்கள் ஆம்புலன்ஸ் முன் அமர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, ராஜேந்திரனை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். அதிர்ச்சியடைந்த டிரைவர்களும், கிளீனர்களும் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது, பாதுகாப்புக்கு வந்த போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அதன் பின் நேற்று மதியம், 12:30 மணிக்கு செல்வமணியின் உடல், கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, 19 மணி நேரம் நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. பின்னர் பெட்ரோல், டீசல் நிரப்பப்பட்ட லாரிகள், வெளி மாவட்டங்களுக்கு வழக்கம் போல் புறப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X