குளித்தலை: குளித்தலையில், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்ட முகாம் நடந்தது. ஆர்.டி.ஓ., புஷ்பாதேவி தலைமை வகித்தார். குளித்தலை தாசில்தார் விஜயா, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார்கள் கலியமூர்த்தி, மைதிலி ஆகியோர் திட்டம் குறித்து பேசினர். மாவட்ட மறுவாழ்வு துறை நல அலுவலர் காமாட்சி, துறையின் திட்டம், செயல்பாடுகள் குறித்து பேசினார். இதில் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, நலவாரியத்தில் பதிவு செய்தல், கல்வி உதவித்தொகை, தொழில் கடன் உதவி, அடையாள அட்டை புதுப்பித்தல் உள்ளிட்டவை தொடர்பான மனுக்கள் பெறப்பட்டன. மடக்கு சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள், ஊன்றுகோல், காது கேளாதோர் கருவி உள்ளிட்டவை மருத்துவ பரிசோதனைக்கு பின் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு காது, மூக்கு, தொண்டை மருத்துவர் ஷீபா, நரம்பியல் மருத்துவர் கிருஷ்ணா பிரசாத், கண் மருத்துவர் ஷர்மிளா, ஆர்த்தோ மருத்துவர் அன்பழகன், நரம்பியல் மருத்துவர் கிருஷ்ண பிரசாத், மனநல மருத்துவர் குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE