மோட்டார் வாகன ஆய்வாளர் மீது மோதிய வாகனம் அடையாளம் தெரிந்தது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மோட்டார் வாகன ஆய்வாளர் மீது மோதிய வாகனம் அடையாளம் தெரிந்தது

Added : நவ 24, 2021
Share
கரூர்: கரூர் அருகே, மோட்டார் வாகன ஆய்வாளர் மீது மோதிய வாகனம் குறித்து, அடையாளம் தெரிந்தது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை இனுகூர் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ், 57; இவர், கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த, 2020 முதல் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்திம் காலை, 9:30 மணிக்கு கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வெங்ககல்பட்டி அருகே, அடையாளம் தெரியாத

கரூர்: கரூர் அருகே, மோட்டார் வாகன ஆய்வாளர் மீது மோதிய வாகனம் குறித்து, அடையாளம் தெரிந்தது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை இனுகூர் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ், 57; இவர், கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த, 2020 முதல் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்திம் காலை, 9:30 மணிக்கு கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வெங்ககல்பட்டி அருகே, அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார். இதையடுத்து, தான் தோன்றிமலை போலீசார், தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள, 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அப்போது மோட்டார் வாகன ஆய்வாளர் கனகராஜ் மீது, கடவூர் அருகே கீரனூர் பகுதியை சேர்ந்த சுரேஷ், 28, என்பவர் ஓட்டிச்சென்ற மகேந்திரா மேக்ஸி வேன் மோதியது தெரிய வந்தது. ஆனால், சுரேஷ் தலைமறைவாகி விட்டார். அவரை, தான்தோன்றிமலை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X