சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எலக்ட்ரீஷியன் கொலை: வாலிபருக்கு குண்டாஸ்

Added : நவ 24, 2021
Share
Advertisement
கரூர்: தோகைமலை அருகே நடந்த எலக்ட்ரீஷியன் கொலை வழக்கில் கைதான வாலிபர், குண்டர் சட்டத்தின் கீழ், சிறையில் அடைக்கப்பட்டார். கரூர் மாவட்டம், தோகைமலை கொன்னாச்சிபட்டியை சேர்ந்தவர் அதியமான், 29; எலக்ட்ரீஷியன். இவரை கடந்த ஆக.,31ல் ஏற்பட்ட தகராறின் போது, குளித்தலை அழகானம்பட்டியை சேர்ந்த பிரபாகரன், 29; என்பவர் கொலை செய்துள்ளார். இதனால், பிரபாகரனை தோகைமலை போலீசார் கைது செய்து,

கரூர்: தோகைமலை அருகே நடந்த எலக்ட்ரீஷியன் கொலை வழக்கில் கைதான வாலிபர், குண்டர் சட்டத்தின் கீழ், சிறையில் அடைக்கப்பட்டார். கரூர் மாவட்டம், தோகைமலை கொன்னாச்சிபட்டியை சேர்ந்தவர் அதியமான், 29; எலக்ட்ரீஷியன். இவரை கடந்த ஆக.,31ல் ஏற்பட்ட தகராறின் போது, குளித்தலை அழகானம்பட்டியை சேர்ந்த பிரபாகரன், 29; என்பவர் கொலை செய்துள்ளார். இதனால், பிரபாகரனை தோகைமலை போலீசார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில், பிரபாகரனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யும்படி, கலெக்டர் பிரபு சங்கர் நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து, திருச்சி மத்திய சிறையில் உள்ள, பிரபாகரனிடம் குண்டர் சட்டத்தின் கீழ், அடைப்பதற்கான நகலை போலீசார் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X