சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக் மீது கார் மோதி போட்டோகிராபர் பலி

Added : நவ 24, 2021
Share
Advertisement
குளித்தலை: திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருகே கீழ கொண்டயம்பட்டியை சேர்ந்தவர் சின்னதுரை, 36. போட்டோகிராபர். இவர் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த போட்டோகிராபர் அருண் பாண்டியன், 31. என்பவருடன் திருச்சியில் இருந்து கரூருக்கு நேற்று முன்தினம் பஸ்ஸில் வேலை விஷயமாக வந்தனர். வேலையை முடித்துவிட்டு, கரூரில் உள்ள தன் உறவினரான பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான பைக்கில் இருவரும்

குளித்தலை: திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருகே கீழ கொண்டயம்பட்டியை சேர்ந்தவர் சின்னதுரை, 36. போட்டோகிராபர். இவர் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த போட்டோகிராபர் அருண் பாண்டியன், 31. என்பவருடன் திருச்சியில் இருந்து கரூருக்கு நேற்று முன்தினம் பஸ்ஸில் வேலை விஷயமாக வந்தனர். வேலையை முடித்துவிட்டு, கரூரில் உள்ள தன் உறவினரான பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான பைக்கில் இருவரும் திருச்சிக்கு வந்தனர். திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மணத்தட்டை அருகே வந்தபோது, எதிரே லாலாப்பேட்டையை சேர்ந்த ராம்பிரபு, 31, என்பவர் ஓட்டிவந்த கார் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சின்னதுரை சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த அருண் பாண்டியன், காரில் வந்த ராம்பிரபு, தந்தை ராமகிருஷ்ணன் ஆகிய மூவரையும் மீட்டு, குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் அருண் பாண்டியன், ராமகிருஷ்ணன் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அருண்பாண்டியன் அளித்த புகார்படி, குளித்தலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X