சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட ராணுவ வீரர்; ஹெலிகாப்டரில் தேடும் பணி தீவிரம்

Added : நவ 24, 2021
Share
Advertisement
வேலூர்: வேலூர் அருகே, பாலாற்றில் அடித்து செல்லப்பட்ட ராணுவ வீரரை, ?ஹலிகாப்டரில் தேடியும் கிடைக்கவில்லை.வேலூர் மாவட்டம், வடுகந்தாங்கல் அடுத்த மேல்வில்லாச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன், 32. ராணுவ வீரரான இவர் லடாக்கில் பணியாற்றி வந்தார். இவருக்கு திவ்யா, 25, என்ற மனைவி, ஆறு மாத பெண் குழந்தை உள்ளனர். ஒரு மாத விடுமுறையில் மனோகரன் சொந்த ஊருக்கு வந்தார். மீண்டும் லடாக் செல்ல,

வேலூர்: வேலூர் அருகே, பாலாற்றில் அடித்து செல்லப்பட்ட ராணுவ வீரரை, ?ஹலிகாப்டரில் தேடியும் கிடைக்கவில்லை.


வேலூர் மாவட்டம், வடுகந்தாங்கல் அடுத்த மேல்வில்லாச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன், 32. ராணுவ வீரரான இவர் லடாக்கில் பணியாற்றி வந்தார். இவருக்கு திவ்யா, 25, என்ற மனைவி, ஆறு மாத பெண் குழந்தை உள்ளனர். ஒரு மாத விடுமுறையில் மனோகரன் சொந்த ஊருக்கு வந்தார். மீண்டும் லடாக் செல்ல, ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய கடந்த, 18 மாலை, 4:00 மணிக்கு விரிஞ்சிபுரம் தரைப்பாலத்தை பைக்கில் கடந்து சென்ற போது, வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அதிகாரிகளிடம் தெரிவித்தும் கண்டுகொள்ளாததால், இந்து முன்னணி வேலூர் கோட்ட தலைவர் மகேஷ் தலைமையில் நேற்று காலை கலெக்டர் அலுவலகம் வந்த ராணுவ வீரர் மனைவி திவ்யா தர்ணாவில் ஈடுபட்டார். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பின், ஆந்திரா மாநிலம், திருப்பதியில் இருந்து ஏர் கமாண்டர் சரண் தலைமையில் மதியம், 12:00 முதல் மதியம், 3:00 மணி வரை விரிஞ்சிபுரத்திலிருந்து கல்பாக்கம் வரை ?ஹலிகாப்டர் மூலம் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஆற்றுக்கு அடியில் பார்க்கும் வசதியுள்ள கேமரா, ஹெலிகாப்டரில் சென்று தேடியும் அவரும், பைக்கும் கிடைக்கவில்லை. சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று இடங்களை தெரிவித்துள்ளனர். அங்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் தேடி பார்க்க திட்டமிட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X