சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரயில்கள் மோதி 46 ஆடுகள் பலி

Added : நவ 24, 2021
Share
Advertisement
அரக்கோணம்: அரக்கோணம் அருகே, ரயில்கள் மோதி, 46 ஆடுகள் பலியாகின. ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த சேத்தமங்கலத்தை சேர்ந்தவர் மணிநாதன், 56; கோழிப்பாக்கத்தை சேர்ந்தவர் முனியாண்டி, 67; இவர்கள், பாணாவரம் ரயில் தண்டவாளம் அருகே, நேற்று காலை, 6:00 மணிக்கு, 76 ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர். தண்டவாளத்தை கடந்து ஆடுகள் சென்றபோது, அந்த வழியாக சென்ற சரக்கு ரயில் மற்றும் பயணிகள்

அரக்கோணம்: அரக்கோணம் அருகே, ரயில்கள் மோதி, 46 ஆடுகள் பலியாகின. ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த சேத்தமங்கலத்தை சேர்ந்தவர் மணிநாதன், 56; கோழிப்பாக்கத்தை சேர்ந்தவர் முனியாண்டி, 67; இவர்கள், பாணாவரம் ரயில் தண்டவாளம் அருகே, நேற்று காலை, 6:00 மணிக்கு, 76 ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர். தண்டவாளத்தை கடந்து ஆடுகள் சென்றபோது, அந்த வழியாக சென்ற சரக்கு ரயில் மற்றும் பயணிகள் ரயில்கள் மோதி, 46 ஆடுகள் பலியாகின. அரக்கோணம் ரயில்வே போலீசார் இறந்து கிடந்த ஆடுகளை அப்புறப்படுத்தினர். இது குறித்து, ரயில்வே போலீசார் கூறுகையில், 'தண்டவாளம் அருகிலும், குறுக்கிலும் ஆடு, மாடுகளை மேய்ப்பது தவறு. இது குறித்து பலமுறை எச்சரித்தும் மக்கள் அதை கண்டுகொள்ளாமல் மேய்ப்பதால், ரயில்களில் சிக்கி கால்நடைகள் பலியாகின்றன' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X