பொது செய்தி

தமிழ்நாடு

பாலாற்றில் அடித்து வரப்பட்ட 36 மாடுகள் உயிருடன் மீட்பு

Added : நவ 24, 2021
Share
Advertisement
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே, பாலாற்றில் அடித்து வரப்பட்ட, 36 மாடுகளை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர். கர்நாடகா மாநிலம், பேத்தமங்கலம் அணை திறக்கப்பட்டதால், கடந்த, 19 முதல் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக வங்கக்கடலில் வெள்ளநீர் கலந்து வருகிறது. அன்று மாலை, வேலூர்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே, பாலாற்றில் அடித்து வரப்பட்ட, 36 மாடுகளை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர். கர்நாடகா மாநிலம், பேத்தமங்கலம் அணை திறக்கப்பட்டதால், கடந்த, 19 முதல் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக வங்கக்கடலில் வெள்ளநீர் கலந்து வருகிறது. அன்று மாலை, வேலூர் சேண்பாக்கம் பகுதியிலிருந்த, 70 மாடுகள் பாலாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. தீயணைக்கும் துறையினர் மாடுகளை தேடி வந்தனர். ராணிப்பேட்டை அடுத்த புளியங்கண்ணு பகுதி பாலாற்றில் மாடுகள் அடித்து வரப்பட்டன. சிப்காட், ராணிப்பேட்டையை சேர்ந்த தீயணைப்பு துறையினர் ரப்பர் படகு மூலம் பாலாற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட, 36 மாடுகளை கடந்த இரண்டு நாட்களில் மீட்டு அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர். இதில், பல மாடுகளை வெள்ளம் குறைவான பகுதிகளில் தண்ணீரில் ஓட்டிச்சென்று கரை சேர்த்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X