கத்ரினா கைப் கன்னம் போல் சாலைகள் இருக்க வேண்டும்; ராஜஸ்தான் அமைச்சர் ‛‛கிளுகிளு'' பேச்சு

Updated : நவ 24, 2021 | Added : நவ 24, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
ஜெய்ப்பூர்: சாலைகள் பாலிவுட் நடிகை கத்ரினா கைப்பின் கன்னம்போல் இருக்க வேண்டும் என ராஜஸ்தான் அமைச்சர் பேசியிருப்பது வைரலாகியுள்ளது.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக பீஹார் முதல்வராக இருந்த லாலு பிரசாத் பீஹாரில் பாலிவுட் நடிகை ஹேமமாலினியின் கன்னங்கள் போல மிருதுவாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையானது. அதேபோல், ம.பி.,யில் கடந்த 2019ல்
Roads, Smooth, KatrinaKaif Cheeks, Rajasthan Minister, சாலைகள், கத்ரினா கைப், கன்னங்கள், ராஜஸ்தான் அமைச்சர்

ஜெய்ப்பூர்: சாலைகள் பாலிவுட் நடிகை கத்ரினா கைப்பின் கன்னம்போல் இருக்க வேண்டும் என ராஜஸ்தான் அமைச்சர் பேசியிருப்பது வைரலாகியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக பீஹார் முதல்வராக இருந்த லாலு பிரசாத் பீஹாரில் பாலிவுட் நடிகை ஹேமமாலினியின் கன்னங்கள் போல மிருதுவாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையானது. அதேபோல், ம.பி.,யில் கடந்த 2019ல் அம்மாநில காங்கிரஸ் அமைச்சர் பி.சி.சர்மா, 'ஹேமமாலினி கன்னங்கள் போன்று சாலைகள் அழகாக்கப்படும்' எனக் கூறியிருந்தார். அந்த வரிசையில் தற்போது ராஜஸ்தான் காங்., அமைச்சரும் இணைந்துள்ளார்.


latest tamil news


ராஜஸ்தானில் சமீபத்தில் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டு பலருக்கு புதிதாக அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதில், பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த ராஜேந்திர சிங் குத்தாவுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ராஜஸ்தானின் ஜூன்ஜூனு மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற அவர், அதிகாரிகளிடம் சாலைகள் ஹேமமாலினி கன்னங்கள் போல மிருதுவாக இருக்க வேண்டும் எனக் கூறினார். பிறகு, அங்கிருந்த மக்களிடம், 'இப்போது எந்த நடிகை பிரபலமாக உள்ளார்,' எனக் கேட்கிறார். அதற்கு கூட்டத்தினர் கத்ரினா கைப் என்றதும், 'கத்ரினா கைப்பின் கன்னங்கள் போல இப்பகுதியில் சாலை அமைக்கப்பட வேண்டும்,' எனக் கூறினார். அமைச்சரின் இந்த பேச்சு இப்போது வைரலாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
25-நவ-202104:31:17 IST Report Abuse
J.V. Iyer பிரேக் போட்டால் வழுக்கிடும் சார்
Rate this:
Cancel
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
24-நவ-202123:30:09 IST Report Abuse
DARMHAR இந்த மட மந்திரி எப்போ கத்ரினா கைப்பின் கன்னத்தை தடவி பார்த்தான் ?
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
24-நவ-202121:54:16 IST Report Abuse
NicoleThomson சல்லு தாவூத் மாதிரி வாகனம் வந்துரா போவுது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X