தி.மு.க.,வில் குடும்ப அரசியல்: ஜே.பி.நட்டா விமர்சனம்

Updated : நவ 24, 2021 | Added : நவ 24, 2021 | கருத்துகள் (79)
Share
Advertisement
திருப்பூர்: ‛‛தமிழகத்தில் தி.மு.க.,வில் குடும்ப அரசியல் மற்றும் ஊழல் பல வருடங்களாக உள்ளது தான். நாம் குடும்ப அரசியலுக்கு எதிராக போராடுகிறோம். பா.ஜ., குடும்ப அரசியலுக்கு எதிரானது,'' என்று பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசினார்.திருப்பூர் பல்லடம் ரோடு லட்சுமி திருமண மண்டபத்தில் நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் பங்கேற்று பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது:
Tirupur, Bjp, Jpnadda, திருப்பூர், பாஜ, செயற்குழு, ஜேபிநட்டா, பங்கேற்பு

திருப்பூர்: ‛‛தமிழகத்தில் தி.மு.க.,வில் குடும்ப அரசியல் மற்றும் ஊழல் பல வருடங்களாக உள்ளது தான். நாம் குடும்ப அரசியலுக்கு எதிராக போராடுகிறோம். பா.ஜ., குடும்ப அரசியலுக்கு எதிரானது,'' என்று பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசினார்.


latest tamil news


திருப்பூர் பல்லடம் ரோடு லட்சுமி திருமண மண்டபத்தில் நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் பங்கேற்று பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது: சிறந்த கலாச்சாரம் கொண்ட தமிழக செயற்குழுவில் பங்கேற்றதில் பெருமையடைகிறேன். திருப்பூர் பல சுதந்திர போராட்ட வீரர்களை கொண்டது. திருப்பூர் குமரனை நினைவுகூர்கிறோம். சுதந்திரத்திற்காக வாழ்வை அர்ப்பணித்த வ.உ.சி., போன்றோர் உள்ளனர்.

தமிழகத்தில் தி.மு.க.,வில் குடும்ப அரசியல் மற்றும் ஊழல் பல வருடங்களாக உள்ளது தான். நாம் குடும்ப அரசியலுக்கு எதிராக போராடுகிறோம். பா.ஜ., குடும்ப அரசியலுக்கு எதிரானது.முன்னேற்றம் மற்றும் தமிழக மக்கள் நலனுக்கானது பா.ஜ., மட்டுமே.தி.மு.க., தமிழக கலாச்சாரத்தை, பண்டிகையை மாற்ற முயல்கிறது.


latest tamil news



கொரோனா காலத்தில் பக்தர்களை கோவிலுக்குள் செல்ல அனுமதிக்காமல் செய்தது தி.மு.க., அரசு. பா.ஜ.,வினர் போராட்டத்திற்கு பின்னர் தான் கோவிலுக்குள் அனுமதித்தது. வெற்றிவேல் யாத்திரையை தடுக்க பார்த்த தலைவர்கள் எல்லாம் இப்போது வேலோடு போட்டோ எடுத்துக்கொள்கிறார்கள். தமிழக வளர்ச்சிக்கும், தமிழ் கலாச்சாரத்துக்கும், தமிழ் மொழி வளர்ச்சிக்கும், பா.ஜ., துணை நிற்கும்.

தமிழை உலக அரங்கிற்கு பிரதமர் மோடி கொண்டு சென்றுள்ளார்.கொரோனா தொற்று உச்சம் தொட்ட போது 9 மாத காலத்தில் தீவிரமாக செயல்பட்டு தடுப்பூசி மூலம் அதை ஒழித்தவர் மோடி. லட்சக்கணக்கான உயிர்களை பாதுகாத்தார். எதிர்கட்சிகள் அதை மோடி ஊசி, பா.ஜ., ஊசி என பயமுறுத்தி பிரச்சாரம் செய்தன.


latest tamil news


இந்தியாவில் 108 கோடி பேருக்கு மேல் இன்று தடுப்பூசி செலுத்தியுள்ளனர். விவசாய மேலான்மைக்கு பல்வேறு திட்டங்கள் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 5,990 கோடிருபாய் பிரதான் கிஷான் திட்டத்திற்காக தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.பிரதமர் மோடி பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளார். தி.மு.க., கொடுத்த வாக்குறுதிப்படி குறைத்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை.

கொரோனா தொற்றின்போது உணவு, மருந்து இல்லாமல் யாரும் இருக்க கூடாது என பா.ஜ.,வினர் உழைத்தனர். ஆனால், அப்போது தி.மு.க.,வினர் தங்களை தனிமைப்படுத்திகொண்டனர். இவ்வாறு ஜே.பி.நட்டா பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (79)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
25-நவ-202117:54:50 IST Report Abuse
sankaseshan கொசு அதுபோலவே பூனை மேல் மதில் வங்கமொழியில் பேசினத்தையும் நினைச்சேன் கொல்லென்று சிரித்த்து விட்டேன்
Rate this:
Cancel
செல்வம் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ
25-நவ-202109:17:07 IST Report Abuse
செல்வம் அதாவது பார்ட்னர்ஷிப் லவ் இருக்கும்போது பார்ட்னர் இறந்துட்டாரு அண்ணா. அவருடைய சொத்து கேக்கறதுக்கு யாரும் இல்ல அதனால கலைஞர் அதைத் தன்னுடன் இணைத்துக்கொண்டார் இப்ப கலைஞருக்கு அப்புறம் அவரு பையன் அதுக்கு அவரு போய் அவர் பையன் இப்படி தான் குடும்ப சொத்து வரும். வீடியோ பதிவு குடும்ப சொத்தை யாராவது மத்தவங்களோட பங்கு போடுவாங்களா
Rate this:
Cancel
TamilReader - Dindigul,இந்தியா
25-நவ-202106:33:10 IST Report Abuse
TamilReader ""பிரதமர் மோடி பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளார்" என்று சொன்னார்... ஆனால் 52 ருபாய் உயர்த்தி விட்டு 5 ருபாய் குறைத்து விட்டோம் என்று சொல்ல வில்லை... அது தான் ஒத்த ஒட்டு பிஜேபி இவங்க சொன்ன ஒவொருத்துருக்கும் 15 லட்சம் ருபாய் தரம் என்று சொல்லி பல வருடங்கள் ஆகிவிட்டது ... அதைப்பத்தி ஏன் பேச மாட்டீங்கறாங்க? இந்த 7 ஆண்டுகளில் அம்பானி, அதானி, போன்ற கார்பொரேட் முதலைகள் எவ்வளவு முன்னேற்றம் அடைந்து உள்ளார்கள் ... ஆனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் எவ்வளவு முன்னேற்றம் அடைந்து உள்ளார்கள் என்பதை ஆராயவும்
Rate this:
raja - Cotonou,பெனின்
25-நவ-202110:53:37 IST Report Abuse
rajaசன் குழும கார்போரேட்டு கூட இந்த ஏழு வருசத்துல லட்சம் கோடின்னு சம்பாரிச்சிருக்காமே ....தெரியுமா உடன்பிறப்பே.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X