சிங்கப் பெண்கள்

Added : நவ 24, 2021
Share
Advertisement
சென்னை அண்ணாநகரில் உள்ள ‛அன் ஸ்கூல்' கட்டிடத்தின் மாடி பல்வேறு வித உடற்பயிற்சி கருவிகளின் உபயோகத்தால் தடதடக்கிறது.மெலிதான வெளிச்சத்தில் கல்லுாரி மாணவியர் சிலர் நவீன உடற்பயிற்சி கருவிகளின் துணையோடு கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.அவர்களை இயன்முறை மருத்துவரும்,உடற்பயிற்சி நிபுணருமான ஸ்வேதா டிரில் வாங்கிக் கொண்டிருந்தார்ஏசி அறையிலும் அனைவரும்
சிங்கப் பெண்கள்


சென்னை அண்ணாநகரில் உள்ள ‛அன் ஸ்கூல்' கட்டிடத்தின் மாடி பல்வேறு வித உடற்பயிற்சி கருவிகளின் உபயோகத்தால் தடதடக்கிறது.
மெலிதான வெளிச்சத்தில் கல்லுாரி மாணவியர் சிலர் நவீன உடற்பயிற்சி கருவிகளின் துணையோடு கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்களை இயன்முறை மருத்துவரும்,உடற்பயிற்சி நிபுணருமான ஸ்வேதா டிரில் வாங்கிக் கொண்டிருந்தார்
ஏசி அறையிலும் அனைவரும் வேர்த்து விறுவிறுத்து போயிருந்தனர்
யார் இவர்கள் எதற்காக இந்தப் பயிற்சி என்பதை அறியும் முன் குரு சித்தார்த்தை சந்தித்துவிடுவோம்.
குரு சித்தார்த் வெளிநாட்டில் இருந்தவர் அங்கு இருந்த போதுதான் நம்மூர் உடற்பயிற்சி கூடத்திற்கும் அங்குள்ள உடற்பயிற்சி கூடத்திற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்தார்.
இங்கே நரம்புகள் தெரிக்க கை கால்களை புடைக்கும் படி வைத்திருப்பதைதான்‛பிட்னெஸ்' என்று நம்புகின்றனர்.
ஆனால் உண்மையில் பிட்னெஸ் என்பது அதுவல்ல ஒவ்வொருவரின் உடல்வாகிற்கு ஏற்ப உடம்பை விஞ்ஞான முறைப்படி உணவு மற்றும் உடற்பயிற்சியின் அடிப்படையில் பிட்டாக வைத்துக் கொள்வதுதான்.
இதை உணர்ந்த குரு சித்தார்த் இங்குள்ள மக்களுக்கு இதை கற்றுத்தர நிறுவியதுதான் ‛அன் ஸ்கூல்'.இதன் அகடாமிக் டைரக்டராக ராமகிருஷ்ணா உள்ளார்.
அன் ஸ்கூல் ஒரு ஜிம் அல்ல பிட்னெஸ் சென்டர், இங்கு எல்லா வயது ஆண்களும் பெண்களும் வந்து விஞ்ஞான முறைப்படி பயிற்சி பெறலாம் இங்கு பயிற்சி பெற்றவர்கள் பிறருக்கும் பயிற்சி தரலாம் அந்த முறையில் இது டிரெய்னருகளுக்கான டிரெய்னிங் சென்ட்டர் என்று கூட சொல்லலாம்.
ஆரோக்கியமான சமுதாயம் அமைய வேண்டும் என்ற நோக்கம் கொண்ட குரு சித்தார்த்தின் கவனத்திற்கு ஒரு விஷயம் கொண்டு வரப்பட்டது.
மாநில அளவிலான கபடி வீராங்கனைகளும் கல்லுாரி மாணவியருமான சிலர் விளையாட்டின் போது தேவைப்படும் உடல் மற்றும் உள்ள உறுதிக்கு சில உடற் பயிற்சிகள் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறப்பட்டது
உடனடியாக அவர்களை பிட்னெஸ் சென்டருக்கு வரவழைத்து அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை இங்குள்ள பயிற்சியாளர் ஸ்வேதா மூலம் வழங்கி வருகிறார்.
இப்போது மைதானத்தில் எவ்வளவு நேரம் விளயைாடினாலும் களைப்பு வருவதில்லை என்றும், கபடிக்கு தேவையான ஸ்ட்ராங்கான தன்மையும் தங்களுக்கு இங்கு பயிற்சி பெறுவதன் மூலம் கிடைத்து வருவதாகவும் தெரிவித்தனர்.இவர்களுடன் தடகள வீராங்கனை ஒருவரும் இணைந்துள்ளார்.இங்கு கிடைக்கும் பயிற்சி இவர்களது விளையாட்டு முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கட்டும்.
இவர்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பை இலவசமாக வழங்கிய குரு சித்தார்த்தை பாராட்டவும்,அன் ஸ்கூல் பற்றி கூடுதலாக தெரிந்து கொள்ளவும் 94457 66555 என்ற எண்ணுடன் தொடர்பு கொள்ளவும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X