பொது செய்தி

இந்தியா

பாட்னாவில் ஜாலியாக ஜீப்பில் வலம் வந்த லாலு பிரசாத்

Updated : நவ 24, 2021 | Added : நவ 24, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
பாட்னா: கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று, உடல்நல பிரச்னை காரணமாக ஜாமினில் இருக்கும் பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் தான் முதன் முதலில் வாங்கிய ஜீப்பை தானே சிறிது தூரம் ஓட்டிச் சென்றார். அந்த வீடியோவை அவரே வெளியிட்டுள்ளார்.பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் மீது 1997-ல் கால்நடை தீவ ஊழல் தொடர்பான 6 வழக்குகளில்
Lalu Prasad Yadav, Takes, His First Vehicle, Jeep, லாலு பிரசாத் யாதவ், ஜீப்

பாட்னா: கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று, உடல்நல பிரச்னை காரணமாக ஜாமினில் இருக்கும் பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் தான் முதன் முதலில் வாங்கிய ஜீப்பை தானே சிறிது தூரம் ஓட்டிச் சென்றார். அந்த வீடியோவை அவரே வெளியிட்டுள்ளார்.

பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் மீது 1997-ல் கால்நடை தீவ ஊழல் தொடர்பான 6 வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டார். அவ்வழக்குகளில் நான்கில் அவருக்கு சிறை தண்டனை கிடைத்தது. 3 ஆண்டுகள் சிறையில் இருந்தார். மற்றொரு வழக்கு தற்போது பாட்னா சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி மாதம் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் டில்லி எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அவரது உடல்நலம் கருதி அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.


latest tamil news


அதனைத் தொடர்ந்து டில்லியில் தனது மூத்த மகள் மிசாவின் இல்லத்தில் தங்கியிருந்தார். இந்நிலையில் மற்றொரு ஊழல் வழக்கில் ஆஜாராவதற்காக நேற்று (நவ.,23) பாட்னா வந்தார். இன்று தனது முதல் ஜீப்பை எடுத்துக் கொண்டு அவரே சிறிது தூரம் ஓட்டிச் சென்றார். அந்த வீடியோவை அவரே பகிர்ந்துள்ளார். அதில் "பல வருடங்களுக்குப் பிறகு, எனது முதல் வாகனத்தை ஓட்டினேன். இந்த உலகில், ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் ஓட்டுநர்கள் தான். உங்கள் வாழ்வில் அன்பு, நல்லிணக்கம், சமத்துவம், அமைதி, வளம், பொறுமை, நீதி என்ற கார் எப்பொழுதும் அனைவரையும் அழைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக ஓடட்டும்.” என கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
25-நவ-202104:29:59 IST Report Abuse
J.V. Iyer ஜெய்பிம் போன்ற சினிமாக்களும், அந்தோணி சூரியா போன்ற சினிமாக்காரர்களுக்கு இவர்களை தூக்கி வைத்து காண்பிப்பதால் வந்த வினை.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
24-நவ-202120:49:12 IST Report Abuse
Natarajan Ramanathan இது இன்னும் ........
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
24-நவ-202120:31:01 IST Report Abuse
A.George Alphonse இந்த நாடு கொழுத்த பண முதலைகளுக்கும்,ஊழல் அரசியல் வாதிகளுக்கும் உகந்த நாடு.ஏன் நமது தமிழகத்திலேயே ஜாமினில் வெளியில் வந்த அரசியல் வாதிகள் பதவி சுகத்தை அனுபவித்து பொதுமக்களுக் காக சேவை செய்யும் தியாகிகளாக பவனி வருகிறார்கள்.அரசியல் பதவிகள் ,புகழ், கோதா எல்லாமே இவர்களுக்கு ஒரு பாதுகாப்பு கவசம்தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X