மழைநீர் குழாயில் மழை போல் விழுந்த பணம்; கர்நாடக பொறியாளர் வீட்டில் கத்தை கத்தையாய் பறிமுதல்

Updated : நவ 24, 2021 | Added : நவ 24, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
பெங்களூரு: கர்நாடகாவில் பொதுப்பணித்துறை பொறியாளர் வீட்டில் லஞ்சஒழிப்புத்துறை நடத்திய சோதனையில், மழைநீர் குழாயில் இருந்து மழை போல் பணம் விழுந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.கர்நாடக லஞ்ச ஒழிப்புத்துறை 15 அரசு அதிகாரிகளை குறிவைத்து 60க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டது. இதில், கர்நாடக மாநில பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவரின் வீடும் அடங்கும்.
Karnataka, Cash Flows, Drainage Pipe, ACB Raid, கர்நாடகா, லஞ்ச ஒழிப்புத்துறை, சோதனை, ரெய்டு, பணம், குழாய்

பெங்களூரு: கர்நாடகாவில் பொதுப்பணித்துறை பொறியாளர் வீட்டில் லஞ்சஒழிப்புத்துறை நடத்திய சோதனையில், மழைநீர் குழாயில் இருந்து மழை போல் பணம் விழுந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

கர்நாடக லஞ்ச ஒழிப்புத்துறை 15 அரசு அதிகாரிகளை குறிவைத்து 60க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டது. இதில், கர்நாடக மாநில பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவரின் வீடும் அடங்கும். சாந்த கவுடா என்னும் அந்த பொறியாளரின் வீட்டில் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரிடம் இருந்து சில லட்சம் பணத்தை கைப்பற்றினர். பின்னர், மாடியில் இருந்து இணைக்கப்பட்டிருந்த மழைநீர் குழாயை சோதனையிட்டனர்.


latest tamil news



குழாயை அறுத்து பார்த்ததில் அதிலிருந்து கட்டுக்கட்டாக பணம் விழுந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலிருந்து ஒருவர் குச்சியால் பணத்தை தள்ளிவிட கீழே மழை போல் விழுந்த பணத்தை ஒரு வாளியின் மூலம் சேகரித்தனர். இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி., மகேஷ் கூறுகையில், 'சோதனையில் மொத்தம் ரூ.54 லட்சம் பறிமுதல் செய்தோம். அதில், குழாயில் இருந்து மட்டும் ரூ.13 லட்சம் கைப்பற்றப்பட்டது,' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan -  ( Posted via: Dinamalar Android App )
25-நவ-202109:00:49 IST Report Abuse
 rajan 500 ரு. கரன்சிகள் செல்லாது என்று அறிவிப்பு. செய்தி கேட்ட கருப்பு பண பெரும் புள்ளிகள்.மாரடைப்பால் மரணம்.
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
25-நவ-202106:02:39 IST Report Abuse
Indhuindian பதவி உயர்வு குடுத்தாங்களா இல்லையா. நல்ல காரியம் செய்ய நாள் நட்சத்திரம் பாக்கலாமா? தமிழகத்தை பாத்து கத்துக்க வேணாமா?
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
25-நவ-202104:28:05 IST Report Abuse
J.V. Iyer இவர்கள் குழந்தைகள் எப்படி உருப்படும்? போதையில் போய்விடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X