விளையாட்டு போட்டிகளில் என்.ஜி.எம்., கல்லுாரி வெற்றி

Added : நவ 24, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி: மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற, என்.ஜி.எம்., கல்லுாரி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில், அப்துல் கலாம் நினைவாக நடந்த இறகு பந்து போட்டியில், பெரியவர்களுக்கான பிரிவில், 21/12, 21/19 என்ற புள்ளி கணக்கில், ஆர்.வி., விளையாட்டு அகாடமியிடம் போட்டியிட்டு, என்.ஜி.எம்., கல்லுாரி இரண்டாம் பரிசை பெற்றது.டெக்ஸ் சிட்டி

பொள்ளாச்சி: மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற, என்.ஜி.எம்., கல்லுாரி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில், அப்துல் கலாம் நினைவாக நடந்த இறகு பந்து போட்டியில், பெரியவர்களுக்கான பிரிவில், 21/12, 21/19 என்ற புள்ளி கணக்கில், ஆர்.வி., விளையாட்டு அகாடமியிடம் போட்டியிட்டு, என்.ஜி.எம்., கல்லுாரி இரண்டாம் பரிசை பெற்றது.டெக்ஸ் சிட்டி கல்லுாரியில் நடந்த மாவட்ட அளவில் மகளிருக்கான கைப்பந்து போட்டியில், என்.ஜி.எம்., கல்லுாரி மாணவியர், இறுதி சுற்றில், ஏ.பி.சி., ஸ்போர்ட்ஸ் கிளப் அணியை, 25 - 21, 25 - 18 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று முதல் பரிசை வென்றனர்.திருப்பூரில் நடந்த மாவட்ட ஜூனியர் தடகள சாம்பியன் போட்டியில், கல்லுாரி மாணவர் அபிலேஷ், தட்டு எறிதல் போட்டியில், 35.30 மீட்டர் துாரம் வீசி, இரண்டாமிடம் பிடித்தனர்.வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை கல்லுாரி தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர், முதல்வர் முத்துக்குமரன், நிர்வாக மேலாளர் ரகுநாதன் மற்றும் உடற்கல்வி இயக்குனர் அசோக்குமார் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X