கிணத்துக்கடவு: பனப்பட்டி, மன்றாம்பாளையம், முத்துக்கவுண்டனுார் கிராமங்களில் அமைந்துள்ள, ஆபத்தான பள்ளிக்கட்டடங்களை அகற்றி, புதுகட்டடங்கள் அமைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.கிணத்துக்கடவு ஒன்றியம், முத்துக்கவுண்டனுாரில் அரசு மேல்நிலைப்பள்ளியும், பனப்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளியும், மன்றாம்பாளையத்தில் நடுநிலைப்பள்ளியும் செயல்படுகின்றன.மூன்று பள்ளி வளாகங்களில், 45 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழைய கட்டடங்கள், ஆபத்தான நிலையில் உள்ளன. மழைக்காலத்தில், பழைய கட்டடங்களின் மேற்கூரைகளில், நீர் கசிவு தொடர்வதால், வகுப்பறைகள் பயன்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது.எனவே, பனப்பட்டி, மன்றாம்பாளையம் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள, பழைய கட்டடங்களை அகற்றிவிட்டு, புதிய கட்டடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஒன்றிய கவுன்சிலர் மகேந்திரன் மற்றும் பனப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வேலுமணி ஆகியோர், கிணத்துக்கடவு பி.டி.ஓ.,விடம் மனு கொடுத்து வலியுறுத்தினர்.இதேபோல, கிணத்துக்கடவு ஒன்றியம், முத்துக்கவுண்டனுார் அரசு மேல்நிலைப்பள்ளியில், மழை காரணமாக, இரு வகுப்பறைகள் கொண்ட கட்டடம் இடிந்து, கடந்த ஆண்டு அகற்றப்பட்டது.தற்போது, மேலும் ஒரு கட்டடம் இடிந்துள்ள நிலையில், வகுப்பறைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டது. இவ்விரு கட்டடங்களை இடிந்ததால், நான்கு வருப்பறைகளுக்கு அறைகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.விரைவில், நான்கு வகுப்பறைகளை கட்டித்தர வேண்டும் என, முத்துக்கவுண்டனுார் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பிரபு கலெக்டருக்கு வேண்டுகோள் விடுத்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE