துளிகள் செய்தி

தமிழ்நாடு

பஸ் ஸ்டாண்டுக்குள் செல்லும் பஸ்களால் பயணிகள் நிம்மதி

Added : நவ 24, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு: 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, பொள்ளாச்சி - கோவை செல்லும் அனைத்து தனியார், அரசு பஸ்கள், கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்டுக்குள் சென்று திரும்புகின்றன.பொள்ளாச்சி - கோவை இடையில், கிணத்துக்கடவு அமைந்துள்ளது. கிணத்துக்கடவு வாரச்சந்தையை ஒட்டி, 10 ஆண்டுகளுக்கு முன், பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டு, நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.கோவை, பொள்ளாச்சியில் இருந்து

கிணத்துக்கடவு: 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, பொள்ளாச்சி - கோவை செல்லும் அனைத்து தனியார், அரசு பஸ்கள், கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்டுக்குள் சென்று திரும்புகின்றன.பொள்ளாச்சி - கோவை இடையில், கிணத்துக்கடவு அமைந்துள்ளது. கிணத்துக்கடவு வாரச்சந்தையை ஒட்டி, 10 ஆண்டுகளுக்கு முன், பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டு, நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.கோவை, பொள்ளாச்சியில் இருந்து இயக்கப்படும் பஸ்கள், கிணத்துக்கடவு நகருக்குள் வராமல், நான்கு வழிச்சாலை மேம்பாலம் வழியாக சென்று விடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், பயணிகள் அடிக்கடி பஸ்களை சிறைபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.இதன்விளைவாக, அனைத்து பஸ்களும் கிணத்துக்கடவுக்குள் வந்து சென்றன. ஆனால், பஸ் ஸ்டாண்டுக்குள் செல்லாமல், ரோட்டில் இருந்தபடியே நுழைவு கட்டணத்தை செலுத்தி சென்றன. சமீபத்தில், பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்டுக்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்ல போலீசாரும், நுழைவு கட்டணம் வசூலிப்பவர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.இதையடுத்து, அதிகாரிகளின் நடவடிக்கையால், கடந்த சில நாட்களாக, அனைத்து தனியார் மற்றும் அரசு பஸ்களும், கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்டுக்குள் சென்று, பயணிகளை அழைத்து செல்கின்றன. இதனால், பயணிகள் நிம்மதி அடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X