ஒரு போன் போதுமே!

Added : நவ 24, 2021
Share
Advertisement
ஊராட்சி அலுவலகம் கட்டணும்கிணத்துக்கடவு, கோதவாடி கிராமத்தில், ஊராட்சி அலுவலகம் பழுதடைந்து கைவிடப்பட்டுள்ளது. இதனால், தற்காலிக கட்டடத்தில் செயல்படுகிறது. ஊராட்சி செயல்பாட்டுக்காக உடனடியாக புது கட்டடம் கட்ட வேண்டும்.எம். சக்திவேல், கோதவாடி.மின் வேலி அமைக்கணும்வால்பாறையை சுற்றி உள்ள எஸ்டேட் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகமாக உள்ளது. மக்கள் அச்சம் போக்க,

ஊராட்சி அலுவலகம் கட்டணும்கிணத்துக்கடவு, கோதவாடி கிராமத்தில், ஊராட்சி அலுவலகம் பழுதடைந்து கைவிடப்பட்டுள்ளது. இதனால், தற்காலிக கட்டடத்தில் செயல்படுகிறது. ஊராட்சி செயல்பாட்டுக்காக உடனடியாக புது கட்டடம் கட்ட வேண்டும்.எம். சக்திவேல், கோதவாடி.மின் வேலி அமைக்கணும்வால்பாறையை சுற்றி உள்ள எஸ்டேட் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகமாக உள்ளது. மக்கள் அச்சம் போக்க, குடியிருப்பு பகுதியை சுற்றிலும் மின் வேலி அமைக்க வேண்டும். இதற்கு, எஸ்டேட் மற்றும் வனத்துறையினர் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.கா.வேலாயுதன்,முடீஸ் எஸ்டேட்.
சர்வீஸ் ரோடு என்னாச்சு!பொள்ளாச்சி, ஆ.சங்கம்பாளையத்தில் ரயில்வே பாலத்தின் கீழ்பகுதியில், இரு பக்கமும் சர்வீஸ் ரோடு அமைக்கவில்லை. இதனால், குண்டும், குழியுமான ரோட்டில் வாகனங்களில் செல்லும் மக்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.டி.பிரகாஷ், ஆ.சங்கம்பாளையம்.ரோட்டுல தடுப்பு வையுங்க!பொள்ளாச்சியில், உடுமலை ரோடு, கோவை ரோடு, கடைவீதி சந்திப்பில், போலீஸ் நிழற்கூரை அகற்றப்பட்டு, ரோடு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் சுற்றி செல்வதற்காக வைத்திருந்த தடுப்புகள் அகற்றப்பட்டதால், விபத்து ஏற்படுகிறது.எஸ்.சண்முகம்,பொள்ளாச்சி.
ஆக்கிரமிப்புகளால் அவதிபொள்ளாச்சி, சி.டி.சி., மேடு பஸ் ஸ்டாப்பில் இருந்து, இந்திராநகர் செல்லும் பாதையிலுள்ள குடியிருப்புகள், ரோட்டை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், வாகனங்களில் செல்ல இடையூறாக உள்ளது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.எம். ராஜா, பொள்ளாச்சி.வாகன ஓட்டிகள் அவதிமடத்துக்குளம் தொடங்கி உடுமலை வரை, தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் மழையின் பாதிப்பால் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் வாகனங்களில் செல்வோர் கடும் அவதிக்கு உள்ளாகின்றர். எனவே, விபத்துக்களை தவிர்க்க இதை நெடுஞ்சாலைத்துறையினர் சரி செய்ய வேண்டும்.வே. தன்னாசியப்பன்,மடத்துக்குளம்.குளிர்பானங்கள் கூடுதல் விலைமடத்துக்குளம் தாலுகா பகுதியில் பேக்கரிகளில் டீ, காபி மற்றும் குளிர்பானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. இதைக்கட்டுப்படுத்த, உணவு தரகட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.த. குமரப்பன், மடத்துக்குளம்.போக்குவரத்து நெரிசல்உடுமலை கச்சேரி வீதியில், முக்கிய அலுவலகங்கள் உள்ளன. அந்த ரோட்டில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.எல். ராமர், உடுமலை.நடவடிக்கை எடுக்கப்படுமா?உடுமலை பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானாவில் வாகனங்கள் தாறுமாறாகச்செல்கின்றன. இதனால் சில சமயங்களில் விபத்துகள் ஏற்படுகிறது. இதைக்கட்டுப்படுத்த போலீசார் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.எம். ராஜா, உடுமலை.விரிவுபடுத்தப்படுமா?உடுமலை பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் நிறுத்துவதற்கான போதிய ரேக்குகள் இல்லை. மேலும் குறுகலாக இருப்பதால், இடநெருக்கடியும் ஏற்படுகிறது. எனவே பஸ் ஸ்டாண்டை விரிவுபடுத்த நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சி. மனோகர், உடுமலை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X