ஓவிய கலைஞராவதே இலக்கு!

Added : நவ 24, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி: ''ஓவியம் வரைவதில் மனதில் ஒரு ஆத்ம திருப்தி ஏற்படுகிறது; ஓவிய கலைஞராவதே எனது கனவாகும்,'' என, மாநில அளவில் ஓவியத்தில் முதலிடம் பெற்ற மாணவி தெரிவித்தார்.பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவை சேர்ந்த, மீன்கடை வியாபாரி நந்தகுமார், திலகவதி தம்பதியின் மகள் அனுபிரியா. இவர், பொள்ளாச்சி மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 படிக்கிறார்.சேலத்தில் நடந்த கலா

பொள்ளாச்சி: ''ஓவியம் வரைவதில் மனதில் ஒரு ஆத்ம திருப்தி ஏற்படுகிறது; ஓவிய கலைஞராவதே எனது கனவாகும்,'' என, மாநில அளவில் ஓவியத்தில் முதலிடம் பெற்ற மாணவி தெரிவித்தார்.பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவை சேர்ந்த, மீன்கடை வியாபாரி நந்தகுமார், திலகவதி தம்பதியின் மகள் அனுபிரியா. இவர், பொள்ளாச்சி மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 படிக்கிறார்.சேலத்தில் நடந்த கலா உத்சவ் போட்டியில், இரு பரிமாணம் (2டி) ஓவிய போட்டியில் முதலிடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவியை முதன்மை கல்வி அலுவலர் கீதா, மாவட்ட கல்வி அலுவலர் ராஜசேகரன், என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்களின் செயலர் ராமசாமி, நிர்வாக அலுவலர் சின்னசாமி, தலைமையாசிரியர் சொர்ணமணி ஆகியோர் பாராட்டினர்.மாணவி கூறியதாவது:ஆறாம் வகுப்பு படிக்கும் போதே, ஓவிய கலை மீது ஆர்வம் ஏற்பட்டது. ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினரும் ஊக்கம் கொடுத்ததால், ஓவியத்தில் மாநில அளவில் வெற்றி பெற்றுள்ளேன்.பெயின்டிங், பென்சில் ஆர்ட் வரைவேன். ஒரு ஓவியம் வரைய முழுமையாக ஒரு நாள் ஆகும். ஒருவரது படத்தை பார்த்து வரைய அரை நாளாகும்.ஓவியம் வரையும் போது, கவலைகள் மறந்துவிடுகின்றன. விரும்பியும், முழு ஆர்வமும் ஓவியத்தில் செலுத்தும் போது படைப்பு அழகாக வருகிறது. மனதுக்கு நிம்மதி கிடைப்பதால் தொடர்ந்து ஓவியம் வரைகிறேன். சமூகவலைதளத்தில் பதிவிட்டதை பார்த்த பலரும், ஓவியம் வரைந்து கொடுக்குமாறு கேட்டனர். அவர்களுக்கு ஓவியம் வரைந்து கொடுத்துள்ளேன்.ஓவியக்கலை கற்று, சிறந்த ஓவிய கலைஞராக வேண்டும் என்பதே எனது இலக்காகும். ஓவிய கலை பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X