செய்தி செய்தி

தமிழ்நாடு

சுற்றுலா தகவல் மையம் அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு

Added : நவ 24, 2021
Share
Advertisement
வால்பாறை: வால்பாறை நகரில் சுற்றுலா தகவல் மையம் ஏற்படுத்த வேண்டும் என, சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறையில், இயற்கை அழகை தன்னகத்தை கொண்டுள்ள அக்காமலை புல்வெளி, மத்திய, மாநில அரசுகளால் தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டு, தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.தமிழகத்தின் சிரபுஞ்சி என்றழைக்கப்படும் சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி, நல்லமுடி காட்சி முனை,

வால்பாறை: வால்பாறை நகரில் சுற்றுலா தகவல் மையம் ஏற்படுத்த வேண்டும் என, சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறையில், இயற்கை அழகை தன்னகத்தை கொண்டுள்ள அக்காமலை புல்வெளி, மத்திய, மாநில அரசுகளால் தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டு, தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.தமிழகத்தின் சிரபுஞ்சி என்றழைக்கப்படும் சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி, நல்லமுடி காட்சி முனை, பிரசித்தி பெற்ற கோவில்கள், அணைகள், என, சுற்றுலா பயணிகளை கவர்ந்த பல அம்சங்கள் உள்ளன. இதனால், சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர்.சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில், யானை, வரையாடு, மான், சிங்கவால்குரங்குகள் சாலையோரத்தில் பகல் நேரத்திலேயே முகாமிடுகின்றன.ஆண்டு தோறும் மே மாதம் கோடை விழாவும் நடத்தப்படுகிறது. சுற்றுலா பயணிகள் வருகைக்கு ஏற்ப, வால்பாறையில் தங்கும் விடுதிகள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.வனத்துறை சார்பில், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அட்டகட்டியில் 'ஆர்க்கிட்டோரியம்' அமைக்கப்பட்டுள்ளது. ஆழியாறில் மூலிகை பண்ணை மற்றும் வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.சுற்றுலாத்துறை சார்பில் ஒரு நாள் சுற்றுலா திட்டத்தின் கீழ், கோவை - வால்பாறை இடையே 'டூரிஸ்ட் வேன்' இயக்கப்படுகிறது. வால்பாறை நகராட்சி சார்பில், படகுஇல்லம், தாவரவியல்பூங்கா அமைக்கும் பணியும் தற்போது நடந்து வருகிறது. நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல்வேறு இடங்களில் சுற்றுலா பயணிகள் நலன் கருதி வழிகாட்டி பலகை வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், வால்பாறை நகரில் சுற்றுலாத் துறை சார்பில் சுற்றுலா தகவல் மையம் ஏற்படுத்த வேண்டும், என, கடந்த 10 ஆண்டுகால வலியுறுத்தப்பட்டு வருகிறது. சுற்றுலா தகவல் மையம் அமைந்து, மக்கள் வருகை அதிகரிக்கும் போது, வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். அதனால், இந்த கோரிக்கை எப்போது நிறைவேற்றப்படும் என, மக்கள் காத்திருக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X