காய்ச்சலால் பாதிக்கும் மாணவர்கள்: பள்ளிகளில் விழிப்புணர்வு

Added : நவ 24, 2021
Share
Advertisement
உடுமலை: சீதோஷ்ண நிலை மாற்றத்தால், பள்ளி மாணவர்கள் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாவதால், விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், சீதேஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. இதனால், பொதுமக்களுக்கு காய்ச்சல் பாதிப்பு



உடுமலை: சீதோஷ்ண நிலை மாற்றத்தால், பள்ளி மாணவர்கள் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாவதால், விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், சீதேஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. இதனால், பொதுமக்களுக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோல, மருத்துவமனைகளில் உள்நோயாளியாக அனுமதியாகி சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதேபோல், பல பள்ளி மாணவர்களும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.பள்ளித்தலைமையாசிரியர்கள் கூறியதாவது:தெர்மல் ஸ்கேனர் உதவியுடன் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்னரே மாணவர்கள் வகுப்பறைக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அப்போது, காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டால், பெற்றோர் வரவழைக்கப்பட்டு உடன் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.சில நேரங்களில், மருத்துவமனை செல்லவும் அறிவுறுத்தப்படுகிறது. மழைக்காலங்களில் அசுத்தமான குடிநீர் குடிப்பதாலும், இனிப்பு உணவுகள் அதிகளவு எடுத்துக் கொள்வதால், உடல் நல பாதிப்பு ஏற்படுகிறது.இதனால், மழை காலங்களில் குளிர்பானங்கள், பழைய உணவு, வெளியிடங்களில் தயாராகும் திண்பண்டங்களை தவிர்த்து, உடல் ஆரோக்கியத்தை தற்காத்துக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X