செய்தி செய்தி

தமிழ்நாடு

காஸ்மெடிக் பொருட்கள் விற்பனை தரத்தை சோதிக்க ஆய்வு தேவை

Added : நவ 24, 2021
Share
Advertisement
உடுமலை: கடைகளில் விற்பனை செய்யப்படும் அழகு சாதனைப்பொருட்கள், உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளதா என, ஆய்வு நடத்த கோரிக்கை எழுந்துள்ளது.மருந்து மற்றும் காஸ்மெடிக்ஸ் சட்டப்படி, தயாரிக்கப்படும் அழகு சாதனப்பொருட்களுக்கு உரிமம் பெற வேண்டும்.இதேபோல், பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, பதிவுச்சான்று கட்டாயமாகும். குறிப்பாக,

உடுமலை: கடைகளில் விற்பனை செய்யப்படும் அழகு சாதனைப்பொருட்கள், உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளதா என, ஆய்வு நடத்த கோரிக்கை எழுந்துள்ளது.மருந்து மற்றும் காஸ்மெடிக்ஸ் சட்டப்படி, தயாரிக்கப்படும் அழகு சாதனப்பொருட்களுக்கு உரிமம் பெற வேண்டும்.இதேபோல், பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, பதிவுச்சான்று கட்டாயமாகும். குறிப்பாக, பி.ஐ.எஸ்., விதிமுறையை நிறைவு செய்யும் இவ்வகை தயாரிப்புகள் இருத்தல் வேண்டும்.ஆனால், உடுமலை நகரில், சில கடைகளில் விற்கப்படும் அழகு சாதனப்பொருட்கள் தரமற்று இருப்பதாக, புகார் எழுகிறது. இப்பொருட்களைப் பயன்படுத்தினால், எதிர்வினை புரிந்து கூடுதல் பாதிப்பு ஏற்படுவதாக, வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து தன்னார்வலர்கள் கூறியதாவது:அழகு சாதனப்பொருட்களை வாங்குவோர் அதனை பயன்படுத்துவதிலேயே குறியாக உள்ளனர். தரம் குறித்து தெரிந்து கொள்வதில்லை. அவை, உடல் நலத்துக்கு கேடு விளைவிப்பதாகவும் அமையலாம்.மருந்தக ஆய்வாளர்கள், விற்பனை செய்யப்படும் அழகு சாதனப்பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக, உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா, பிராண்டுகளில் போலியான, கலப்படம் நிறைந்த, அங்கீகரிக்கப்படாத அழகு சாதனப்பொருட்கள் உள்ளதா என கண்டறிய வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X