செய்தி செய்தி

தமிழ்நாடு

கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்: காய்ச்சலுக்கு சிகிச்சை பெற அறிவுரை

Added : நவ 24, 2021
Share
Advertisement
வால்பாறை: வால்பாறையில் வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. சீதோஷ்ண நிலை மாற்றத்தால், பொதுமக்கள் சளி, காய்ச்சல், இருமல் போன்றவற்றால் பாதிக்கபட்டுள்ளனர்.இந்நிலையில், சீதோஷ்ண நிலை மாற்றத்தால் கொசுத்தொல்லையும் அதிக அளவில் உள்ளது. இதை தவிர்க்கும் வகையில், வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதிகளில், நகராட்சி சார்பில் துாய்மை பணியாளர்கள் கொசு மருந்து அடிக்கும்



வால்பாறை: வால்பாறையில் வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. சீதோஷ்ண நிலை மாற்றத்தால், பொதுமக்கள் சளி, காய்ச்சல், இருமல் போன்றவற்றால் பாதிக்கபட்டுள்ளனர்.இந்நிலையில், சீதோஷ்ண நிலை மாற்றத்தால் கொசுத்தொல்லையும் அதிக அளவில் உள்ளது. இதை தவிர்க்கும் வகையில், வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதிகளில், நகராட்சி சார்பில் துாய்மை பணியாளர்கள் கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் கூறியதாவது: வால்பாறை நகராட்சியில் சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி சார்பில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க, தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதனால், கடந்த ஒரு மாதமாக வால்பாறையில் யாருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை.இந்நிலையில், மழை பெய்து தண்ணீர் தேங்கியுள்ளதால், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த, வீடுகளின் அருகில் தண்ணீர் தேங்காமல் பராமரிப்பது அவசியம். திறந்தவெளியில் குப்பையை வீசுவதை தவிர்க்க வேண்டும். வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் கொசுத்தொல்லையை தவிர்க்க, கொசு ஒழிப்பு மருந்து அடிக்கப்படுகிறது.பொதுமக்கள், குடிநீரை கொதிக்க வைத்து பருக வேண்டும். ஈ மொய்க்கும் பண்டங்களை குழந்தைகளுக்கு வாங்கி கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.லேசான சளி, காய்ச்சல், இருமல் இருந்தால், மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். டாக்டர் பரிந்துரை இன்றி, மருந்துக்கடையில் மருந்து வாங்கி உட்கொள்ளக்கூடாது. இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X