செய்தி செய்தி

தமிழ்நாடு

மாணவர் விபரம்: 'எமிஸ்'ல் சரிபார்ப்பு

Added : நவ 24, 2021
Share
Advertisement
உடுமலை: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல், எமிஸ் விபரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், பள்ளி மாணவர்கள் தொடர்பான அனைத்து விவரங்களும் 'எமிஸ்' இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு எமிஸ் எண் வழங்கப்பட்டுள்ளது.அவ்வகையில்,தினமும் பள்ளிக்கு வரும் மாணவர்களின்

உடுமலை: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல், எமிஸ் விபரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், பள்ளி மாணவர்கள் தொடர்பான அனைத்து விவரங்களும் 'எமிஸ்' இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யப்படுகிறது.
இதற்காக ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு எமிஸ் எண் வழங்கப்பட்டுள்ளது.அவ்வகையில்,தினமும் பள்ளிக்கு வரும் மாணவர்களின் வருகைப்பதிவும், டி.என்.எமிஸ் என்ற ஆப்பில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.இந்நிலையில், நடப்பு கல்வியாண்டு, பொதுத்தேர்வு எழுதும், 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியலை, எமிஸ் விபரங்களின் அடிப்படையில் தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, உடுமலை கல்வி மாவட்ட பள்ளிகளில், இதற்கான பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:எமிஸ் இணையதளத்தில், மாணவர்களின் விபரம் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது, மாணவரின் பெயர், பிறந்த தேதி, புகைப்படம் உள்ளிட்ட விபரங்கள், சரிபார்க்கப்படுகிறது.வகுப்பு ஆசிரியர்கள், இதற்கான பணியில், டிச., 4ம் தேதி வரை ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை அந்தந்த பள்ளித்தலைமையாசிரியர்கள் உறுதிபடுத்துவர்.இந்த பெயர் பட்டியலின் அடிப்படையில் மதிப்பெண் சான்று அச்சிடப்படும். பதிவு செய்யப்பட்ட மாணவர்களின் விபரங்களில் தவறு ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியர் மற்றும் தலைமையாசிரியரே பொறுப்பேற்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X