துளிகள் செய்தி

தமிழ்நாடு

குளங்களில் நீர் இருப்பு அதிகரிப்பு: புத்துயிர் பெற்ற ராஜவாய்க்கால் பள்ளம்

Added : நவ 24, 2021
Share
Advertisement
உடுமலை: தொடர் மழை காரணமாக, ஏழு குளங்களின் நீர் வரத்து குறித்து, பொதுப்பணித்துறையினர் தொடர் கண்காணித்து வரும் நிலையில், ராஜவாய்க்கால் பள்ளத்தில், நீண்ட இடைவெளிக்கு பிறகு நீர் வரத்து அதிகரித்துள்ளது.உடுமலை ஏழு குள பாசன திட்டத்தின் கீழுள்ள குளங்களுக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து தளி கால்வாய் வழியாக, அரசாணை அடிப்படையில் தண்ணீர் திறக்கப்படுகிறது. மேலும்,

உடுமலை: தொடர் மழை காரணமாக, ஏழு குளங்களின் நீர் வரத்து குறித்து, பொதுப்பணித்துறையினர் தொடர் கண்காணித்து வரும் நிலையில், ராஜவாய்க்கால் பள்ளத்தில், நீண்ட இடைவெளிக்கு பிறகு நீர் வரத்து அதிகரித்துள்ளது.உடுமலை ஏழு குள பாசன திட்டத்தின் கீழுள்ள குளங்களுக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து தளி கால்வாய் வழியாக, அரசாணை அடிப்படையில் தண்ணீர் திறக்கப்படுகிறது. மேலும், மழைக்காலங்களில், சுற்றுப்பகுதி கிராமங்களின் மழை நீர் ஓடை வாயிலாகவும், குளங்களுக்கு நீர் வரத்து கிடைக்கிறது.இந்நிலையில், நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை, வழக்கத்தை விட, கூடுதலாக பெய்து வருகிறது. ஏற்கனவே, அணையிலிருந்து பெறப்பட்ட தண்ணீர் குளங்களில், நீர் இருப்பு செய்யப்பட்டுள்ளது.தொடர் மழையால், கிராம ஓடைகள் வாயிலாகவும், வரத்து அதிகரித்துள்ள நிலையில், பாசனத்துக்கும், நேரடியாக குளங்களில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.எனவே, ஒட்டுக்குளம் உட்பட குளங்களில், நீர் இருப்பு அதிகரித்து, 70 சதவீதமாக உள்ளது. பெரியகுளம், செங்குளம் உட்பட பிற குளங்களிலும், இதே அளவு இருப்பு உள்ளது.கனமழை பெய்து, அதிகப்படியான நீர் வரத்து இருந்தால், குளங்களில் இருந்து ராஜவாய்க்கால் பள்ளம், தங்கம்மாள் ஓடை உட்பட ஓடைகள் வழியாக, உபரி நீர் திறக்கப்படும். இருப்பினும், நடப்பாண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குளங்களில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதை தவிர்க்க, ஓடைகள் வாயிலாக கிடைக்கும் நீர் வரத்து, குளங்களில் இருப்பு செய்யப்படவில்லை.பொதுப்பணித்துறையினர் கூறுகையில், ஏழு குள பாசன திட்டத்திலுள்ள அனைத்து குளங்களிலும், 70 சதவீத நீர் இருப்பு உள்ளது. மழைக்காலத்தில், திடீரென அதிப்படியான நீர் வரத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம்,' என்றனர்.வெள்ளப்பெருக்கு ஏழு குளங்களின் அருகிலுள்ள கிராம விளைநிலங்களில் இருந்தும், குடியிருப்புகளிலும் இருந்தும், ஓடை வாயிலாக மழை நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர், ராஜவாய்க்கால் பள்ளத்தில், இணைந்து வெள்ளமாக செல்கிறது. இதனால், கழிவு நீர் கால்வாயாக காணப்படும் ராஜவாய்க்கால் பள்ளம், தற்போது தெளிந்த நீரோடையாக மாறி காணப்படுகிறது. தொடர் நீர் வரத்து காரணமாக, ராஜவாய்க்கால் பள்ளத்தின் குறுக்கே, குறிஞ்சேரி உட்பட இடங்களில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் நிரம்பியுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X