சிறப்பு ஒலிம்பிக்கில் கோவை மாணவர்கள்

Added : நவ 24, 2021
Share
Advertisement
கோவை: கோவை, மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள வித்யா விகாசினி பள்ளியை சேர்ந்த முகமது ரியாஸ், விகாசினி, தீக் ஷா ஆகிய மாணவ மாணவிகள் தமிழ்நாடு சிறப்பு ஒலிம்பிக் பாரத் கால்பந்து குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.இதன்மூலம், மாணவிகள் விகாசினி, தீக் ஷா ஆகியோர் ஆசிரியை சசிஅரசியுடன், டில்லியில் அடுத்த ஆண்டு ஜன.,4 முதல் 9ம் தேதி வரை நடக்கவுள்ள, தேசிய அளவிலான சிறப்பு ஒலிம்பிக்
 சிறப்பு ஒலிம்பிக்கில்  கோவை மாணவர்கள்

கோவை: கோவை, மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள வித்யா விகாசினி பள்ளியை சேர்ந்த முகமது ரியாஸ், விகாசினி, தீக் ஷா ஆகிய மாணவ மாணவிகள் தமிழ்நாடு சிறப்பு ஒலிம்பிக் பாரத் கால்பந்து குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.இதன்மூலம், மாணவிகள் விகாசினி, தீக் ஷா ஆகியோர் ஆசிரியை சசிஅரசியுடன், டில்லியில் அடுத்த ஆண்டு ஜன.,4 முதல் 9ம் தேதி வரை நடக்கவுள்ள, தேசிய அளவிலான சிறப்பு ஒலிம்பிக் பாரத் கால்பந்து பயிற்சி முகாமில், பங்கு பெறவுள்ளனர்.மாணவர் முகமது ரியாஸ், பயிற்சியாளர் கண்ணனுடன் பீகாரில் உள்ள முசாபர்பூரில், அடுத்தாண்டு பிப்.,19 முதல் 24 வரை தேசிய அளவில் நடைபெறும், சிறப்பு ஒலிம்பிக் பாரத் கால்பந்து பயிற்சி முகாமில் பங்கேற்கவுள்ளார்.முன்னதாக, இவர்கள் கடந்த 15ம் தேதி மாவட்ட அளவில் நடந்த போட்டியில் மாநில அளவில் தேர்வாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழ்நாடு சார்பாக சிறப்பு ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ள மாணவ, மாணவியரை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X