மாநில இறகுப்பந்து போட்டி: திறமையை நிரூபித்த வீரர்கள்

Added : நவ 24, 2021
Share
Advertisement
கோவை: கோவையில் நடந்த மாநில அளவிலான இறகுப்பந்து போட்டியில், வீரர், வீராங்கனைகள் தங்களின் முழுதிறமையையும் வெளிப்படுத்தி அசத்தினர்.தமிழ்நாடு இறகுப்பந்து கழகம் மற்றும் கோயம்புத்துார் இறகுப்பந்து கழகம் சார்பில், 19 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான இறகுப்போட்டி நடந்தது.கொடிசியா அருகே உள்ள ராக்ஸ் பள்ளியின் உள்விளையாட்டு அரங்கில் நேற்று துவங்கிய



கோவை: கோவையில் நடந்த மாநில அளவிலான இறகுப்பந்து போட்டியில், வீரர், வீராங்கனைகள் தங்களின் முழுதிறமையையும் வெளிப்படுத்தி அசத்தினர்.தமிழ்நாடு இறகுப்பந்து கழகம் மற்றும் கோயம்புத்துார் இறகுப்பந்து கழகம் சார்பில், 19 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான இறகுப்போட்டி நடந்தது.கொடிசியா அருகே உள்ள ராக்ஸ் பள்ளியின் உள்விளையாட்டு அரங்கில் நேற்று துவங்கிய இப்போட்டி, 28ல் நிறைவடைகிறது.கோவை, சென்னை, சேலம், திருப்பூர், திருவண்ணாமலை, துாத்துக்குடி, மதுரை, கன்னியாகுமரி, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதியிலிருந்து, 480 பேர் பங்கேற்றனர்.இப்போட்டியை தமிழ்நாடு இறகுப்பந்து கழகத்தின் செயலாளர் அருணாச்சலம் துவக்கி வைத்தார். கோயம்புத்துார் இறகுப்பந்து கழகத்தின் தலைவர் முத்தரசு, செயலாளர் ஸ்வேதா, பொருளாளர் ஆனந்தகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.நேற்று நடந்த மாணவர்களுக்கான ஒற்றையர் பிரிவு, தகுதி சுற்று முதல் போட்டியில், திருநெல்வேலி அஜய் விஸ்வா, 2-0 என்ற செட் கணக்கில், கோவை ஹரிபிரியனை; 2வது போட்டியில், திருவள்ளூர் ஹர்ஷன் வம்சி, 2-0 என்ற செட் கணக்கில் சென்னையின் பிரகதீஸையும் வென்றனர்.மாணவிகள் பிரிவுஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் தஞ்சாவூர் கவியரசி, 2-0 என்ற செட் கணக்கில் சென்னை, கரண்ஸ்ரேயாயையும், 2வது போட்டியில் கோவை ஹரிணி தேவி, என்ற செட் கணக்கில் காஞ்சிபுரம் லோகமாலிகாவையும் வென்றனர். வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X