சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

அனைவரும் பெறலாம் பென்ஷன்!

Added : நவ 24, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
அரசு ஊழியர் தான் என்றில்லாமல், பிற தனியார் மற்றும் சொந்த வேலைகளில் இருக்கும் அனைவரும் பென்ஷன் பெறலாம் என கூறுகிறார், நிதி ஆலோசகர் மற்றும் நிதி எழுத்தாளர் ப.முகைதீன் ேஷக் தாவூது: அரசு வேலைக்கு அதிகமான வரவேற்பு இருந்ததற்கு முக்கிய காரணம், பென்ஷன் தான். தனியார் ஊழியர்களுக்கு முன்னர் பென்ஷன் கிடையாது. ஆனால் இன்றைக்கு பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் எல்லாரும் பென்ஷன்
சொல்கிறார்கள்

அரசு ஊழியர் தான் என்றில்லாமல், பிற தனியார் மற்றும் சொந்த வேலைகளில் இருக்கும் அனைவரும் பென்ஷன் பெறலாம் என கூறுகிறார், நிதி ஆலோசகர் மற்றும் நிதி எழுத்தாளர் ப.முகைதீன் ேஷக் தாவூது: அரசு வேலைக்கு அதிகமான வரவேற்பு இருந்ததற்கு முக்கிய காரணம், பென்ஷன் தான். தனியார் ஊழியர்களுக்கு முன்னர் பென்ஷன் கிடையாது. ஆனால் இன்றைக்கு பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் எல்லாரும் பென்ஷன் பெறும் நிலையை ஏற்படுத்தி தந்திருக்கிறது, புதிய தேசிய ஓய்வூதிய திட்டம் எனப்படும், 'நேஷனல் பென்ஷன் ஸ்கீம்' - என்.பி.எஸ்.,ஊழியரின் அடிப்படை சம்பளம், அகவிலைப்படியின் கூட்டுத் தொகையில் 10 சதவீத தொகையானது சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு, என்.பி.எஸ்., கணக்கில் செலுத்தப்படும். அரசும் அதே தொகையை தன் பங்களிப்பாக ஊழியரின் கணக்கில் வரவு வைக்கும். அறுபது வயதில் ஊழியர் ஓய்வு பெறும் போது, 60 சதவீத தொகையை ரொக்கமாக பெற்றுக் கொள்ளலாம். மீதி, 40 சதவீத தொகையை ஓய்வுக்கால நிதி மேலாளர்களால் நிர்வகிக்கப்பட்டு, மாதந்தோறும் பென்ஷன் தரப்படும். இது தான் இந்த ஓய்வூதிய திட்டத்தின் அடிப்படை.அரசுப் பணியாளர்களை போல் இந்திய குடிமக்கள் அனைவரும் தன் ஓய்வுக்காலத்தில் பென்ஷன் பெற வேண்டும். கையில் கணிசமான ரொக்கமும் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், 2009 மே முதல் பொதுமக்களுக்கும் இது விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பிய, 70 வயது வரை இந்திய குடிமக்கள் அனைவரும் இத்திட்டத்தில் சேரலாம்.இதில், 75 வயது வரை பங்களிக்கலாம். இதில் சேர இரண்டு வழிகள் உண்டு. அதாவது அரசுடைமை வங்கிகள், தனியார் வங்கிகள் அனைத்திலுமே என்.பி.எஸ்., சேவை உண்டு. இவை, 'வருகை முனைய சேவை மையங்கள்' எனப்படுகின்றன. அஞ்சலகங்களும் சேவை மையங்களே. அருகில் உள்ள சேவை மையம் ஒன்றுக்கு சென்று வயது, இருப்பிட முகவரிக்கான ஆதாரம், ஆதார் எண், பாஸ்போர்ட் புகைப்படம் ஆகியவற்றுடன் நிலையான ஓய்வூதியக் கணக்கு எண் பெற்று, இந்த திட்டத்தில் சேர பணம் செலுத்த துவங்கலாம்.என்.பி.எஸ்., திட்டத் தில் இணை கணக்கு கிடையாது. தனிக்கணக்கு மட்டும் தான். எனவே, குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தனித்தனி ஓய்வூதியக் கணக்கு எண் பெற்று, பணம் செலுத்த ஆரம்பிக்கலாம்.இதில் குறைந்தபட்சம் 500 ரூபாயுடன் கணக்கு துவங்கலாம். ஓராண்டில் குறைந்தபட்ச 'டிபாசிட்' 1,000 ரூபாய். அதிகபட்ச வரம்பு இல்லை.இந்த திட்டத்தில் சேர்ந்து தொடர்ந்து பணம் கட்டி வந்தவர் திடீரென இறந்து விட்டால், அதுவரை கட்டி வந்த பணத்தை திரும்பவும் பெறவும், பென்ஷன் பெறவும் முடியும்.பென்ஷன் என்றாலே அரசு பணியில் இருப்பவர்களுக்கு மட்டும் தான் கிடைக்கும் என்ற எண்ணத்தை தகர்த்து, யார் வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் பென்ஷன் பெற இந்த புதிய திட்டம் வழிவகுக்கிறது!

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
25-நவ-202117:15:37 IST Report Abuse
மலரின் மகள் என்ன பெரிய வித்தியாசம். அரசு தரும் பென்ஷன் அகவிலைப்படி அது இது என்று கூடி கொண்டே இருக்கும். தனியாக பென்ஷன் திட்டத்தில் சேர்ந்தால், நாம் சேமிக்கும் பணத்தை அரசு எடுத்து கொண்டு மிக குறைந்த அளவே வட்டியாக கணக்கிட்டு அதை பென்ஷனாக தருகிறது என்று அறிய முடிகிறது. அரசு ஊழியர்களின் பென்ஷன் வேறு, தனிநபர் சேமிக்கும் பென்ஷன் திட்டங்கள் வேறு. இரண்டாவது தனிநபருக்கு நஷ்டம் அரசுக்கு லாபம், முதலானாது அப்படியே மறுதலை என்று புரிந்து கொள்ள இடமிருக்கிறது. எப்படி கணக்கிட்டு பார்த்தாலும் பென்ஷன் சேமிக்கும் பணத்தில் ஐந்தரை சதாஹவீதம் வட்டியாக கிடைக்கும் என்று கொண்டு அது தேவையா சரிதானா என்று யோசித்து முடிவெடுக்கலாம். அதை விட வேறு வகையிலான திட்டங்கள் அதிக லாபம் கொடுக்கும். அல்லது திரு ஆனந்த் சிறீனிவாசன் சொல்வதை போல சிறுக சிறுக ஆன்லைனில் தங்கத்தில் முதலீடு செய்து பெரியளவில் பாதுகாப்பாக பெறலாம் அல்லது சில எஸ் ஐ பி அல்லது மியூச்சுவல் பன்ட் கலீல் முத்தலீடே செய்யலாம். கட்டுரையாளர் ஒரு கணக்கிட்டு மாதம் ஆயிரம் ருபாய் அவர் சொல்லும் பென்ஷன் திட்டத்தில் குறைந்தது முப்பது வருடங்கள் சேமித்தல் எவ்வளவு பென்ஷன் கிடைக்கும், அதில் அறுபது சதவீதத்தை ஓய்வு கால பயனாக எடுத்து விட்டு மீத பணத்தில் எவ்வளவு பென்ஷன் கிடைக்கும் என்று கணக்கிட்டு சொல்லியிருந்தால் சரியாக இருக்கும். அரசு தருவது அதன் ஊழியர்களுக்கு, நாம் சேமிப்பது அரசிற்கு,
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
25-நவ-202104:27:59 IST Report Abuse
NicoleThomson நன்றி ஐயா இந்த பிக்சட் டெபாசிட் போன்றவற்றில் போடுவதை விட இதில் போடலாம் அல்லவா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X