செய்தி செய்தி

தமிழ்நாடு

நகர்ப்புற வளர்ச்சிக்குழுமம்; வரவேற்கிறது 'கிரெடாய்'

Added : நவ 24, 2021
Share
Advertisement
கோவை: கோவை நகர்ப்புற வளர்ச்சிக் குழுமம் ஏற்படுத்திய, அரசின் நடவடிக்கையை, கிரெடாய் அமைப்பு வரவேற்றுள்ளது.கோவை மாநகர், பல துறைகளில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. கோவைக்கான மாஸ்டர் பிளான் தயாரிப்பு நடைபெற்று வருகிறது.தற்போது, 2,500 ச.மீ., பரப்பளவுக்கு மேற்பட்ட கட்டட அனுமதிக்கு, சென்னைக்கு சென்று வர வேண்டியதுள்ளது. இதற்காக கிரெடாய் அமைப்பு சார்பில், சென்னையைப் போன்று

கோவை: கோவை நகர்ப்புற வளர்ச்சிக் குழுமம் ஏற்படுத்திய, அரசின் நடவடிக்கையை, கிரெடாய் அமைப்பு வரவேற்றுள்ளது.கோவை மாநகர், பல துறைகளில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. கோவைக்கான மாஸ்டர் பிளான் தயாரிப்பு நடைபெற்று வருகிறது.தற்போது, 2,500 ச.மீ., பரப்பளவுக்கு மேற்பட்ட கட்டட அனுமதிக்கு, சென்னைக்கு சென்று வர வேண்டியதுள்ளது. இதற்காக கிரெடாய் அமைப்பு சார்பில், சென்னையைப் போன்று கோவையிலும், நகர்ப்புற வளர்ச்சிக் குழுமம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.கோரிக்கையை ஏற்று, கோவை நகர்ப்புற வளர்ச்சிக் குழுமம் ஏற்படுத்த முதல்வர் அரசாணை வெளியிட்டுள்ளார்.இதற்காக, தமிழ்நாடு கிரெடாய் அமைப்பின் செயலர் அபிஷேக், கிரெடாய் கோவை தலைவர் குகன் இளங்கோ, செயலர் ராஜீவ் ராமசாமி, துணைச் செயலர் அரவிந்த் குமார், கோவை கிரெடாய் முன்னாள் தலைவர் சுரேந்தர் விட்டல் மற்றும் நிர்வாகி பாலசந்திரன் ஆகியோர், கோவைக்கு வருகை தந்த முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X