கள ஆய்வில் குறைந்ததா கோவாக்சின் செயல்திறன்?

Updated : நவ 26, 2021 | Added : நவ 24, 2021 | கருத்துகள் (7) | |
Advertisement
புதுடில்லி ;கொரோனாவுக்கு எதிரான உள்நாட்டு தயாரிப்பான 'கோவாக்சின்' தடுப்பூசியின் செயல்திறன், கள ஆய்வில் 50 சதவீதமாக இருந்ததாக, 'லான்செட்' இதழில் வெளியிடப்பட்டு உள்ள ஆய்வுக் கட்டுரையில் தெரியவந்துள்ளது.கொரோனாவுக்கு எதிராக, தெலுங்கானா மாநிலம் ஐதராபாதைச் சேர்ந்த, 'பாரத் பயோடெக்' நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.இரண்டாவது
கள ஆய்வு, குறைவு, கோவாக்சின் செயல்திறன்?

புதுடில்லி ;கொரோனாவுக்கு எதிரான உள்நாட்டு தயாரிப்பான 'கோவாக்சின்' தடுப்பூசியின் செயல்திறன், கள ஆய்வில் 50 சதவீதமாக இருந்ததாக, 'லான்செட்' இதழில் வெளியிடப்பட்டு உள்ள ஆய்வுக் கட்டுரையில் தெரியவந்துள்ளது.கொரோனாவுக்கு எதிராக, தெலுங்கானா மாநிலம் ஐதராபாதைச் சேர்ந்த, 'பாரத் பயோடெக்' நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.


இரண்டாவது அலைஇந்தாண்டு ஜனவரியில் இதை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்த தடுப்பூசிக்கு, உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் அங்கீகாரம் அளித்தது.பி.பி.வி., 152 என்று அழைக்கப்படும் இந்த கோவாக்சின் தடுப்பூசி தொடர்பான இறுதிக்கட்ட ஆய்வில், அதன் செயல்திறன் 77.8 சதவீதம் என, கூறப்பட்டிருந்தது.இந்நிலையில், ஐரோப்பிய நாடான பிரிட்டனில் இருந்து வெளியாகும் லான்செட் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டுஉள்ளதாவது:கொரோனா வைரஸ் இரண்டாவது அலை இந்தி யாவில் தீவிரமாக இருந்தபோது, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், ஏப்., 15 முதல் மே 15 வரை பரிசோதனை நடத்தப்
பட்டது. கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் இருந்த, பரிசோதனை மேற்கொண்ட 2,714 மருத்துவமனை ஊழியர்களுக்கு இந்தத் தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. இந்த 2,714 பேரில், 1,617 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது. அதே நேரத்தில் 1,097 பேருக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்தது.இவர்கள் அனைவருக்கும், 28 நாட்கள் இடைவெளியில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.


பரிசோதனைஅதில் இதன் செயல்திறன் 50 சதவீதம் என்பது தெரியவந்தது. நாட்டில் நடத்தப்பட்ட முதல் களப் பரிசோதனை இதுவாகும்.ஆய்வகத்தில் நடந்த பரிசோதனை முடிவுகளுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவாகும். அதே நேரத்தில் நோய் தொற்று பாதிப்பு உள்ளவர்களுடன் அதிக நேரம் இருந்தது போன்றவை காரணமாக, மருத்துவமனை ஊழியர்களிடம் செயல்திறன்
குறைவாக இருக்கலாம். பொதுமக்கள் இடையே அடுத்தக்கட்ட சோதனை நடத்தி, செயல்திறன் குறித்து மீண்டும் ஆய்வு செய்யப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழன் - Madurai,இந்தியா
25-நவ-202123:36:13 IST Report Abuse
தமிழன் இப்பெல்லாம் வெள்ளைக்காரனுக்கு இந்தியான்னா ஒரு பீதி.
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
25-நவ-202120:59:29 IST Report Abuse
Balaji கோவிஷில்ட் போட்ட எத்தனை பேருக்கு மீண்டும் கொரோனா வந்தது? அதே போல உலக நாடுகளில் ஊசி போட்டும் கொரோனா வந்தவர்கள் எத்தனை பேர் என்று உண்மையாக எண்ணிக்கைகள் வெளியில் வருமா?
Rate this:
Cancel
25-நவ-202116:09:40 IST Report Abuse
ஆரூர் ரங் பைசர், மாடர்னா தடுப்பூசிகள் போட்டுக் கொண்ட மேற்கத்திய நாடுகளில்😛 நான்காவது அலை பாடுபடுத்துகிறது . ஆனால் இங்கோ நாளுக்குநாள் நோய் குறைகிறது.THE PROOF OF THE PUDDING IS IN THE EATING என்பது போல🤔 கண்கண்ட சாட்சி இதுதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X