துளிகள் செய்தி

தமிழ்நாடு

நிரம்பி ததும்பும் சோலையாறு விவசாயிகள் மகிழ்ச்சி

Added : நவ 24, 2021
Share
Advertisement
வால்பாறை: சோலையாறு அணை நிரம்பிய நிலையில் காட்சியளிப்பதால், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.வால்பாறையில், இந்த ஆண்டு பெய்த கனமழையினால், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை கடந்த, ஜூலை மாதம், 23ம் தேதி நிரம்பியது. தற்போது, வடகிழக்குப் பருவமழையும் தொடர்ந்து பெய்து வருகிறது.இதனால் நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து தண்ணீர் வரத்தும் அதிகரித்து வருகிறது. நேற்று காலை

வால்பாறை: சோலையாறு அணை நிரம்பிய நிலையில் காட்சியளிப்பதால், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.வால்பாறையில், இந்த ஆண்டு பெய்த கனமழையினால், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை கடந்த, ஜூலை மாதம், 23ம் தேதி நிரம்பியது. தற்போது, வடகிழக்குப் பருவமழையும் தொடர்ந்து பெய்து வருகிறது.இதனால் நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து தண்ணீர் வரத்தும் அதிகரித்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, சோலையாறு அணையில், 160.46 அடி நீர்மட்டம் இருந்தது. சோலையாறு அணை இந்த ஆண்டில் இது வரை ஏழுமுறை நிரம்பியது. பாசனத்துக்கு தண்ணீர் வழங்கும் நிலையிலும், நான்கு மாதங்களாக சோலையாறு அணை நீர்மட்டம் சரியாமல் உள்ளதால், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நேற்று காலை வரை பதிவான மழையளவு (மி.மீ.,) நிலவரம்: சோலையாறு - 7, பரம்பிக்குளம் - 14, ஆழியாறு - 45, வால்பாறை - 6, மேல்நீராறு - 16, கீழ்நீராறு - 10, சர்க்கார்பதி - 32, வேட்டைக்காரன்புதுார் - 57, மணக்கடவு - 26, துாணக்கடவு - 25, பெருவாரிப்பள்ளம் - 35, மேல்ஆழியாறு - 10, பொள்ளாச்சி - 10 என்ற அளவில் மழை பெய்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X