செய்தி செய்தி

தமிழ்நாடு

தேசிய கருத்தரங்கில் பங்கேற்க மலை கிராம பெண்கள் தேர்வு

Added : நவ 24, 2021
Share
Advertisement
உடுமலை: பழங்குடியினரின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக, மத்திய அரசால் நடத்தப்படும், கருத்தரங்கில், தமிழக பிரதிநிதிகளாக, உடுமலை கரட்டுப்பதியை சேர்ந்த, பெண்கள் பங்கேற்கின்றனர்.மத்திய அரசின், பழங்குடியினர் நலத்துறை சார்பில், 'ஆதி மகோத்சவம்' என்ற விழா நடத்தப்படுகிறது. இவ்விழாவையொட்டி, நடத்தப்படும் கருத்தரங்கில், நாடு முழுவதும் உள்ள, பழங்குடியினர் வரவழைக்கப்பட்டு,

உடுமலை: பழங்குடியினரின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக, மத்திய அரசால் நடத்தப்படும், கருத்தரங்கில், தமிழக பிரதிநிதிகளாக, உடுமலை கரட்டுப்பதியை சேர்ந்த, பெண்கள் பங்கேற்கின்றனர்.மத்திய அரசின், பழங்குடியினர் நலத்துறை சார்பில், 'ஆதி மகோத்சவம்' என்ற விழா நடத்தப்படுகிறது. இவ்விழாவையொட்டி, நடத்தப்படும் கருத்தரங்கில், நாடு முழுவதும் உள்ள, பழங்குடியினர் வரவழைக்கப்பட்டு, அவர்களின் வாழ்வியல், கலாசாரம், பொருளாதார மேம்பாடு, கல்வி வளர்ச்சி, தொழில் வளர்ச்சி குறித்து விவாதிக்கப்படும்.நடப்பாண்டு கருத்தரங்கு, புதுடில்லியில் இன்று (25ம் தேதி) துவங்குகிறது. இக்கருத்தரங்கில், தமிழகத்தின் பிரதிநிதிகளாக, பங்கேற்க உடுமலை கரட்டுப்பதி மலைவாழ் கிராமத்தைச்சேர்ந்த மகுடேஸ்வரி, பிரியா ஆகிய பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இப்பெண்கள், தென்னை நாரில் கைவினைப்பொருட்கள், தயாரிக்க, உடுமலை சுற்றுச்சூழல் சங்கம் வாயிலாக பயிற்சி பெற்று, பிற மலைவாழ் கிராம பெண்களுக்கும் பயிற்சியளித்து வருகின்றனர்.எனவே, மலைவாழ் மக்கள் மேம்பாட்டு ஆணையம் வாயிலாக புதுடில்லி கருத்தரங்கில், பங்கேற்க தேர்வு செய்யப்பட்டு, அங்கு பிற மாநிலத்தை சேர்ந்த பழங்குடியினருக்கு, கைவினைப்பொருட்கள் தயாரிப்பு குறித்து, இரு நாட்கள் பயிற்சியளிக்க உள்ளனர்.தேசிய அளவிலான கருத்தரங்கில், தங்கள் கிராம பெண்கள் பங்கேற்பது மகிழ்ச்சியளிப்பதாக, கரட்டுப்பதி மலைவாழ் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X