தமிழ்நாடு

மழையால் கவலையில்லை! ஒரே நாளில் தரமான கொப்பரை உற்பத்தி... ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நவீனம்

Added : நவ 24, 2021
Share
Advertisement
உடுமலை: தொடர் மழையிலும், கொப்பரை உற்பத்தி பாதிக்காத வகையில், உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூட வளாகத்தில், அமைக்கப்பட்டுள்ள நவீன இயந்திரம் விவசாயிகளுக்கு கைகொடுத்து வருகிறது.உடுமலை சுற்றுப்பகுதிகளில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் தேங்காய் நேரடியாகவும், கொப்பரை களங்கள் அமைத்து கொப்பரையாக தரம் உயர்த்தியும் விற்பனை செய்யப்படுகிறது.

உடுமலை: தொடர் மழையிலும், கொப்பரை உற்பத்தி பாதிக்காத வகையில், உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூட வளாகத்தில், அமைக்கப்பட்டுள்ள நவீன இயந்திரம் விவசாயிகளுக்கு கைகொடுத்து வருகிறது.உடுமலை சுற்றுப்பகுதிகளில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் தேங்காய் நேரடியாகவும், கொப்பரை களங்கள் அமைத்து கொப்பரையாக தரம் உயர்த்தியும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக, கொப்பரை உற்பத்தி செய்யும் வகையில்,500க்கும் மேற்பட்ட உலர் களங்கள் உள்ளன.இக்களங்களில், தேங்காய் உடைத்து, தொட்டியுடன் காய வைக்கப்படுகிறது. பிறகு ஓடு நீக்கி, தேங்காய் மட்டும், சிறிதாக நறுக்கி, களங்களில் காய வைக்கப்படுகிறது.நன்கு வெயில் அடித்தால், தேங்காய் முதல் தரமான கொப்பரை உற்பத்தி செய்ய, 5 நாட்கள் தேவைப்படுகிறது. மேக மூட்டம், வெயில் குறைவு உள்ளிட்ட காரணங்களினால், கால தாமதம் ஆவதோடு, ஆட்கள் தேவையும் அதிகளவு உள்ளது.தற்போது, வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்து, தொடர் மழை பெய்து வருவதால், கொப்பரை உற்பத்தி முடங்கியுள்ளது. களங்கள் அனைத்தும் பயன்படுத்தாமல் வீணாக உள்ளது.
மழைக்காலத்திலும் கொப்பரை உற்பத்தி செய்யும் வகையில், உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூட வளாகத்தில், அமைக்கப்பட்டுள்ள நவீன கொப்பரை உற்பத்தி இயந்திரத்தில், ஒரே நாளில், தரமான கொப்பரை உற்பத்தி செய்யப்படுகிறது.இரு கலன்களுடன், தலா, 10 ஆயிரம் தேங்காய், என, 20 ஆயிரம் தேங்காயிலிருந்து கொப்பரை உற்பத்தி செய்யும் திறன் உடையதாகும்.இந்த இயந்திரம், தேங்காய் தொட்டி, பண்ணை கழிவுகள் மற்றும் விறகு வாயிலாக, வெப்பம் ஏற்றப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் வெப்பக்காற்றால் உலர்த்தப்படுகிறது. தேங்காய் நேரடியாக, ஒரு கலனில் கொட்டப்பட்டு, 8 மணி நேரம் வெப்பக்காற்றால் காயவைக்கப்படுகிறது.பின்னர், அதிலிருந்து எடுத்து, தேங்காயிலிருந்து ஓடு பிரிக்க வடிவமைக்கப்பட்டுள்ள நவீன இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள சக்கர அமைப்பில் வைத்தால், இரண்டாக பிரித்தும், அதற்கு பின் தேவையான அளவில் துண்டாக்கி தருகிறது.அதனை எடுத்து, 16 மணி நேரம், கலனில் வைத்து, சூடாக்கப்படுகிறது. இந்த நவீன இயந்திரம் வாயிலாக, 5 சதவீதம் மட்டுமே ஈரப்பதம் உள்ள தரமான கொப்பரை உற்பத்தி செய்ய, 24 மணி நேரம் மட்டுமே தேவைப்படுகிறது.விவசாயி அருணகிரி கூறுகையில், ''தொடர் கன மழை பெய்தாலும், ஒழுங்கு முறை விற்பனைக்கூட வளாகத்திலுள்ள நவீன இயந்திரத்தால், தரமான கொப்பரை, நல்ல நிறத்தில் உற்பத்தி செய்ய முடிகிறது'.'களங்களில் காய வைத்தாலும், ஈரப்பதம், பூஞ்சை மற்றும் வேதி பொருள் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. ஆனால், இங்கு இயற்கை முறையில், குறைந்த ஆட்கள் தேவையுடன், ஒரே சமயத்தில், 20 ஆயிரம் தேங்காய், கொப்பரையாக மாற்ற முடிகிறது,'' என்றார்.கட்டணமில்லைஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சரவணன் கூறியதாவது:நவீன முறையில் கொப்பரை உற்பத்தி செய்யும் கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. மழை காலத்திலும், தரமான கொப்பரை உற்பத்தி செய்ய முடியும்.விவசாயிகள் தங்கள் பண்ணைக்கழிவுகளை கொண்டும், தேங்காய் தொட்டிகளையும் எரிபொருளாக பயன்படுத்தி, செலவில்லாமல், உற்பத்தி செய்து வருகின்றனர்.விவசாயிகளிடம், நவீன இயந்திரத்தில் கொப்பரை உற்பத்தி செய்ய கட்டணம் வசூலிப்பதில்லை.
உற்பத்தி செய்த கொப்பரை, ஒழுங்கு முறை விற்பனை கூடம் வாயிலாக, விற்பனை செய்யும் வசதியும், போதிய விலை கிடைக்கவில்லை என்றால், இருப்பு வைத்து விற்பனை செய்து கொள்ளும் வகையில், குடோன்களும் உள்ளன.விவசாயிகளுக்கு, குறைந்த வட்டியில், 3 லட்சம் ரூபாய் வரை பொருளீட்டுக்கடனும் வழங்கப்படுகிறது. எனவே, விவசாயிகள் நவீன இயந்திரம் வாயிலாக கொப்பரை உற்பத்தி செய்யலாம்.இவ்வாறு, கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X