செய்தி செய்தி

தமிழ்நாடு

இரு ஆண்டுக்கு பின் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Added : நவ 24, 2021
Share
Advertisement
உடுமலை: உடுமலை வருவாய்க்கோட்டத்தில், இரு ஆண்டுக்கு பின், விவசாயிகள் குறை தீர் கூட்டம் வரும் 30ம் தேதி நடக்கிறது.உடுமலை, மடத்துக்குளம் தாலுகாப்பகுதிகளில் விவசாயம் பிரதானமாக உள்ளது. பி.ஏ.பி., அமராவதி, ஏழு குளம் பாசனத்திட்டங்கள், மானாவாரி சாகுபடி ஆகியவற்றில் விவசாயிகள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் வகையில்,

உடுமலை: உடுமலை வருவாய்க்கோட்டத்தில், இரு ஆண்டுக்கு பின், விவசாயிகள் குறை தீர் கூட்டம் வரும் 30ம் தேதி நடக்கிறது.உடுமலை, மடத்துக்குளம் தாலுகாப்பகுதிகளில் விவசாயம் பிரதானமாக உள்ளது. பி.ஏ.பி., அமராவதி, ஏழு குளம் பாசனத்திட்டங்கள், மானாவாரி சாகுபடி ஆகியவற்றில் விவசாயிகள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் வகையில், கோட்டாட்சியர் தலைமையில், அனைத்துத்துறை அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்கும் கூட்டம், மாதம்தோறும், மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் நடந்து வந்தது.சட்டசபை தேர்தல் அறிவிப்பு, கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், இரு ஆண்டாக கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்படாமல் இருந்தது.மாவட்ட அளவிலான குறை தீர்க்கும் கூட்டம், கலெக்டர் தலைமையில் நடந்து வரும் நிலையில், கோட்ட அளவில் நடத்துவது குறித்து அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.
ஒவ்வொரு பிரச்னைக்கும் தீர்வு காண, கலெக்டர் அலுவலகம் செல்ல வேண்டியுள்ளது; கோட்ட அளவிலான குறை தீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில், வரும், 30ம் தேதி, காலை, 11:00 மணிக்கு, கோட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்படும் என, கோட்டாட்சியர் கீதா அறிவித்துள்ளார்.


தீர்வு கிடைக்குமா?

விவசாயிகள் கூறியதாவது: கோட்ட அளவிலான விவசாயிகள் ஏராளமான பிரச்னைகளுடன் பங்கேற்று மனு அளித்தாலும், பெரும்பாலான மனுக்களுக்கு தீர்வு கிடைக்காமல், கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதிகாரிகள் பங்கேற்காமலும், விவசாயிகளின் குறைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காமல், சம்பிரதாயமாக மட்டுமே நடந்து வந்தது. இரண்டு ஆண்டுக்கு பின், துவங்கியுள்ள நிலையில், இனிமேலாவது, விவசாயிகளுக்கு தீர்வு கிடைக்கும் கூட்டமாக அமைய வேண்டும்.இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X