ரூ.400 கோடி கறுப்பு பணம் சிக்கியது

Added : நவ 24, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி:டில்லியின் 'ரியல் எஸ்டேட்' நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், 400 கோடி ரூபாய் கறுப்பு பணம் சிக்கி உள்ளது.இது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் நேற்றைய அறிக்கை:டில்லியில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்யும் இரு 'ரியல் எஸ்டேட்' நிறுவனங்கள், வருமானத்தை மறைத்து முறைகேடுகளில் ஈடுபடுவதாக ரகசிய தகவல்

புதுடில்லி:டில்லியின் 'ரியல் எஸ்டேட்' நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், 400 கோடி ரூபாய் கறுப்பு பணம் சிக்கி உள்ளது.
இது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் நேற்றைய அறிக்கை:டில்லியில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்யும் இரு 'ரியல் எஸ்டேட்' நிறுவனங்கள், வருமானத்தை மறைத்து முறைகேடுகளில் ஈடுபடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் அந்நிறுவனங்களின் அலுவலகங்களில் சமீபத்தில் சோதனை நடத்தப் பட்டது. சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில், வீடுகள் விற்பனை வாயிலாக பெறும் தொகையின் ஒரு பகுதியை ரொக்கமாக வாங்குவதும், அதை கணக்கில் காண்பிக்காமல் மோசடி செய்வதும் உறுதியானது.
அதேபோல், போலி நிறுவனங்கள் பெயரில் ஆவணங்கள் தயாரித்து வருமானத்தை மறைத்துள்ளதுடன், செலவு கணக்குகளையும் மோசடியாக பராமரித்து உள்ளனர். இந்த வகையில், இரு நிறுவனங்களும் 400 கோடி ரூபாய் வரை கறுப்பு பணமாக பெற்றுள்ளனர். அவர்களிடம் இருந்து 10 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை தொடர்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
25-நவ-202119:12:50 IST Report Abuse
D.Ambujavalli நிலைமை கொஞ்சம் சீரியஸாகத்தான் போகும் போலிருக்கிறது என்ன செய்வது, ஓரிரு இரண்டு , மூன்று பெட் ரூம் பிளாட்களை கொடுத்து தப்பிக்க வேண்டியதுதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X